காரைக்குடி 'சிக்ரி' யில் புகைமாசை கட்டுப்படுத்தும் பசுமை 'கிரீன் பட்டாசு' !

0
காரைக்குடியில் மத்திய அரசின் கீழ் செயல்படும் 'சிக்ரி' யில் விஞ்ஞானி சுப்ரதா 
குண்டு தலைமை யிலான குழுவினர் புகைமாசை கட்டுப்படுத்தும் பசுமை பட்டாசை உருவாக்கி யுள்ளனர்.

இயக்குனர் விஜயமோகனன் பிள்ளை, விஞ்ஞானி சுப்ரதா குண்டு கூறுகையில், 

''நைட்ரேட்டை அடிப்படையாக கொண்டு சிவகாசியில் பட்டாசு தயாரிக்கப் படுகிறது. 

நாட்டின் மொத்த தேவையில் 85 சதவீதம் இங்கு தயாரிக்கப் படுகிறது.

ஒலி மற்றும் காற்று மாசால் பட்டாசு விற்க டில்லியில் தடை உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, 

பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டிய கட்டாயத்தில் உற்பத்தி யாளர்கள் உள்ளனர். 

சிவகாசியில் அலுமினியத்தை முக்கிய மூலப்பொருளாக கொண்டு, சல்பர், கார்பன், பொட்டாசியம் நைட்ரேட் சேர்த்து தயாரிக்கப் படுகிறது.


தற்போது சிக்ரி கண்டு பிடித்துள்ள பட்டாசில், அலுமினியத் துக்கு பதில் மெக்னீசியம் சேர்க்கப் பட்டுள்ளது. 

சல்பர், கார்பன் தேவை யில்லை. ஒலி அளவு 120 -லிருந்து 111 டெசிபலாக குறைக்கப்படும். காற்று மாசு 70 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது. 

அடுத்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசுகள் சந்தைக்கு வர வாய்ப்பு உள்ளது, 

இதில் சிக்ரியுடன் நாக்பூரின் நீரி ஆராய்ச்சி நிலையம், சிவகாசி டான்பாமா இணைந்து செயல் படுகின்றது, என்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings