முறையற்ற உறவால் கார் ஓட்டுநர், கழுத்தறுத்து கொலை !

0
கொடைக்கானலில் வாடகை கார் ஓட்டுநர், கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு உடல் பள்ளத் தாக்கில் 
வீசப்பட்ட தற்கு சினிமா நடிகை ஒரு வருடனான கள்ளத் தொடர்பு காரணம் என்கிற தகவல் வெளியாகி யுள்ளது.

சினிமா நடிகையான தனது மகளுடன் கார் ஓட்டுனர் தகாத உறவு வைத்திருந்த காரணத்தி னால்

நடிகையின் தந்தை கூலிப்படையை ஏவி கார் ஓட்டுனரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொடைக்கானல் கார்தே நகர் நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த காரின் உட்புறத்தில் ரத்தக்கறை படிந்து இருந்ததோடு, மிளகாய் பொடி சிதறி கிடந்துள்ளது.

விசாரணையில் அந்த கார் கொடைக்கானல் அட்டுவம் பட்டியைச் சேர்ந்த பிரபாகரனுடையது என்பது தெரிய வந்தது.

அவருடைய செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது, அழைப்பை எடுக்க வில்லை.

இதனை தொடர்ந்து அந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி செல்போன் சிக்னல் மூலமாக இருப்பிடத்தை போலீசார் கண்டு பிடித்தனர்.

இதை யடுத்து செல்போன் சிக்னல் கிடைத்த சிட்டி டவர் எனும் இடதிற்கு சென்ற போலீசார்

வனப்பகுதி யில் 50 அடி பள்ளத்து க்குள் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த பிரகாரன் சடலத்தை மீட்டனர்.

தொடர்ந்து பிரபாகரன் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது குறிப்பிட்ட ஒரு எண்ணுக்கு அவர் அடிக்கடி பேசியது தெரிய வந்தது.

அந்த எண் ஐதரபாத்தை சேர்ந்த விஷ்ணு பிரியா எனும் நடிகைக்கு சொந்தமானது என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

விஷ்ணு பிரியா நடிகர் சூர்யா நடித்த மாயாவி படத்தில் மாற்றுத் திறனாளியாக நடித்தவர் ஆவார்.

பிரபாகரனுடன் அடிக்க செல்போனில் பேசிய நடிகை விஷ்ணுப் பிரியாவுக்கு கொடைக்கானலில் சொகுசு பங்களா மற்றும் தோட்டம் இருந்துள்ளது.


விடுமுறைக் காக அடிக்கடி கொடைக்கானலு க்கு விஷ்ணுப் பிரியா வந்து சென்ற போது கார் ஓட்டுனரான பிரபாகரனுடன் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப் படுகிறது.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டு, கொடைக்கானலில் உல்லாச மாக

பொழுதை கழித்து வரும் தகவல் நடிகையின் தந்தை சூரிய நாராயணனு க்கு தெரிய வந்துள்ளது.

இதனை யறிந்த விஷ்ணுப் பிரியாவின் தந்தை சூரிய நாரயணன், இருவரையும் பலமுறை கண்டுத்த தாக சொல்லப் படுகிறது.

ஆனாலும் கார் ஓட்டுனர் பிரபாகரனுடன் விஷ்ணு பிரியா மிகவும் நெருக்க மானதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சூரிய நாரயணன் கூலிப்படை மூலம் பிரபாகரனை கொலை செய்ததாக போலீசார் கூறி யுள்ளனர்.

பிரபாகரனை அவரது நண்பரான செந்தில் என்பவர் மூலமாகவே சூரிய நாராயனன் கொலை செய்துள்ள தாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரபாகரனைக் கொலை செய்வதற்காக செந்திலுக்கு சூரிய நாராயணன் மூன்றரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக வும் சொல்லப் படுகிறது.

இதனை தொடர்ந்து செந்தில், தனது நண்பரும் ஊர்க்காவல் படையில் பணி புரிந்தவரு மான மணிகண்டன் மற்றும்,

முகமது சல்மான், முகமது இர்பான் ஆகியோருடன் சேர்ந்து பிரபாகரனை அழைத்துச் சென்று ஆடு அறுக்கும் கத்தியை வைத்து கொலை செய்து வீசியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, பிரபாகரன் உள்ளிட்ட கொலையாளிகள் நான்குபேரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த கொலையில் தொடர்புடைய நடிகை விஷ்ணுப் பிரியாவின் தந்தை சூரிய நாரயணனையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings