ஆவணங் களை சரி பார்க்கக் காத்திருக் காமல், காகிதங் களற்ற முறையில்
பயணம் செய்ய இந்தத் தொழில் நுட்பம் உதவும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
உலகம் நவீன மயமாகிக் கொண்டிருக் கிறது. எங்கும் தொழில் நுட்பத்தின் ஆதிக்கம் தான் கோலோச்சு கிறது.
வேகம் வேகம் என வேகமெடுக்கும் மக்களுக்குத் தகுந்தவாறு அனைத்தும் மாறி வருகின்றன.
அதன் படி விரைவில் விமான நிலையங் களுக்குள் பயணிகள் எளிதில் செல்லும் வகையில்
மின்னணு நுழைவு வாயில்கள் அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
குறிப்பாக,சென்னை விமான நிலைய த்தில் அடுத்த ஆண்டு இறுதியில் மின்னணு நுழைவு வாயில்கள் பொறுத்தப்பட உள்ளன.
மேலும், இந்தத் தொழில் நுட்பம் அதிக எதிர் பார்ப்புகளை உருவாக்கி யுள்ளது என்று தான் கூற வேண்டும்.
நீண்ட நேரக் காத்திருப்பு
பொதுவாக விமானப் பயணம் மேற்கொள் பவர்கள், விமான நிலையங்க ளுக்குள்
பல்வேறு பரிசோதனை களைத் தாண்டிச் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது.
அதிலும் கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி யுள்ளது .
மின்னணு முறையில் பரிசோதனை
இந்தக் காத்திருப்பு நேரத்தைக் குறைப்ப தற்காகப் பணிகளின் வசதிக்குத்
தகுந்தபடி மின்னணு முறையில் பரிசோதனை செய்யும் நுழைவு வாயில் களைப் பொருத்த தற்சமயம் முடிவு செய்யப் பட்டுள்ளது.
அதன்படி விமான முனையங் களின் நுழைவுப் பகுதி, பாதுகாப்பு சோதனைப் பகுதி,
விமானங் களுக்குச் செல்வதற் கான பகுதி ஆகிய இடங்களில் மின்னணு நுழைவு வாயில்கள் அமைக்க ப்படும் என்று தெரிவிக் கப்பட் டுள்ளது.
மேலும், நுழைவுப்பகுதியில் விமானப் பயணச் சீட்டின் கியூஆர் கோடு (QR Code) மற்றும்
பயணியின் முகம் ஆகியவை இந்தத் தொழில் நுட்பத்தின் மூலம் ஸ்கேன் செய்யப்படும்.
பின்பு ஏற்கனவே உள்ள தகவல்கள் தரவு களுடன் சரி பார்க்கப்படும்.
டிஜி யாத்ரா
இதன் மூலம் ஆவணங்கள் ஆய்வுப் பகுதி, பாதுகாப்புப் பகுதி, விமானங் களுக்கு
செல்லும் வழி ஆகிய வற்றுக்குச் செல்ல அனுமதிக்கப் படுவார்கள்.
இதற்கு வேண்டி டிஜி யாத்ரா (Digi Yatra ) என்ற வலை தளத்தில் பதிவு செய்து, அடையாள எண்ணைப் பெற வேண்டும் எனக் கூறப் படுகிறது.
பின்பு விமான நிலை யத்திற்கு முதல் முறை செல்லும் போது, அந்த அடையாள எண்ணை வழங்க வேண்டும்.
மேலும், பயணியின் புகைப்படம், கண் கருவிழி மற்றும் ரேகைப் பதிவுகள் செய்யப் படும்.
அதன் பிறகு பயணம் மேற் கொள்ளும் பயணிகள் எந்த வொரு தாமதமும் இல்லாமல் செல்ல முடியும் என்று கூறப் படுகிறது.
முதலில் பெங்களூரு விமான நிலைய த்தில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில்
இந்தப் புதிய தொழில் நுட்பம் கொண்டு வரப்படும் என்று தெரிவிக் கப்பட்டு ள்ளது.
2-வது கட்டமாக சென்னை விமானத்தில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மின்னணு நுழைவு
வாயில்கள் பொருத்த ப்படும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
இதே போல் புனே, வாரணாசி, கொல்கத்தா, விஜயவாடா விமான நிலையங் களிலும் மின்னணு நுழைவு வாயில்கள் பொருத்தப்பட உள்ளன.
Thanks for Your Comments