சென்னை வேளச்சேரி-கடற்கரை மார்க்க பறக்கும் ரயில் தண்ட வாளத்தில் கடந்த 5 நாட்களில் 2வது முறையாக
சிமென்ட் ஸ்லாப் வைத்து ரயிலைக் கவிழ்க்கை சதி செய்த விஷமிகளை ரயில்வே போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சென்னை பெருங்குடி-தரமணி பறக்கும் ரயில் நிலையங் களுக்கு இடையில் உள்ள தண்ட வாளத்தில் நேற்று விஷமிகள் சிமென்ட் ஸ்லாப் ஒன்றை வைத்துச் சென்றனர்.
இதனை தொடர்ந்து நேற்று அந்த மார்கத்தில் வேளச்சேரி யில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற
பறக்கும் ரயிலின் ஓட்டுனர் தண்ட வாளத்தில் பொருள் ஒன்று இருப்பதை பார்த்து வேகத்தை குறைத்துள்ளார்.
இருந்த போதும், சிமென்ட் ஸ்லாப்பின் மீது ரயில் ஏறி இறங்கியது.
இதை யடுத்து ரயிலை நிறுத்திய ஓட்டுநர், ரயில்வே பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் அங்கு சென்று உடைந்து நொறுங்கி கிடந்த சிமென்ட் ஸ்லாப்பை பார்வை யிட்டனர்.
இதன் பின்னர் 10 நிமிடங் களுக்கு மேலாக நிறுத்தப் பட்ட ரயில் கடற்கரை நோக்கி சென்றது.
ஏற்கெனவே கடந்த 31-ம் தேதி இதேபோல வேளச்சேரி - பெருங்குடி ரயில் நிலையங் களுக்கு இடையே
சிறிய அளவிலான ஸ்லாப் ஒன்று தண்ட வாளத்தில் வைக்கப்பட்டு ரயிலை கவிழ்க்கும் முயற்சி நடைபெற்றது.
அது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ரயில்வே காவல்துறை ஏடிஜிபி சைலேந்திர பாபு
ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் இரண்டரை கிலோ மீட்டர் நடந்தே சென்று நேற்று பகல் ஆய்வு செய்தார்.
வெளி யிடங்களில் இருந்து தண்டவாள பகுதிக்குள் புகாதவாறு கட்டு மானங்கள் அமைக்கவும் உத்தர விடப்பட்டது.
இந்நிலையில், நேற்று இரவே தண்ட வாளத்தில் மீண்டும் சிமென்ட் ஸ்லாப் வைத்து விபத்தை ஏற்படுத்தும் சதி நடை பெற்றுள்ளது.
இதை யடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில்வே டி.எஸ்.பி. ரவி தலைமை யில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு
போலீசார் இரவு நேரங்களில் பறக்கும் ரயில் தண்டவாள பகுதியில் ரோந்தில் ஈடுபட உத்தர விடப்பட் டுள்ளது.
கடந்த 5 நாட்களில் இரண்டு முறை பறக்கும் ரயில் தண்ட வாளத்தில் சிமென்ட் ஸ்லாப் வைக்கப் பட்டது,
ரயில் ஓட்டுநர்கள் மட்டுமின்றி ரயில் பயணிகளை யும் அச்ச மடையச் செய்துள்ளது.
பெரியளவில் விபத்து நடைபெறும் முன்பே பாதுகாப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Thanks for Your Comments