கள்ளக் காதலுக்காக பெற்ற குழந்தைகளையே கொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கும்
அபிராமியின் கணவர் தன் குடும்பத்தில் ஏற்பட்ட பூகம்பத்தை நம்ப மறுத்து இன்னும் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருக்கிறார்.
குன்றத்தூர் காவல் நிலையத்து க்கு வந்த விஜய் அங்குள்ள காவலர்களிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அபிராமியின் கணவர் விஜய் போலீசாரிடம் கூறியதாவது:
இதுவரை குழந்தைகளை ஒருமுறை கூட அடிக்காத தன் மனைவி, அவர்களை கொன்றிரு க்கும் அதிர்ச்சியில் இருந்து மீண்டுவர முடியவில்லை.
தன் குழந்தைகளின் படிப்பி லிருந்து, அவர்களது தேவைகள் அனைத்தையும் கவனித்து கொண்டது, தனது மனைவிதான்.
தன் முன்பு ஒரு நாள் கூட குழந்தை களை அடிக்காத அபிராமி, கள்ளக்காதல் வலையில் விழுந்த பிறகு அவர்களையே கொல்லத் துணிந்தது பெரும் அதிர்ச்சி அளித்தது.
குடும்பம் நடத்தவே கஷ்டப்பட்டலும், தன் மனைவிக் காக இரு சக்கர வாகனம் வாங்கிக் கொடுத்தேன்.
அந்த வாகனத்திலும் தன் இரு குழந்தைகளின் பெயரை எழுதிக் கொடுத்தேன்.
வெகுநேரம் அந்த காவல் நிலையத்தில் தனிமையில் இருந்த விஜய் தலை கவிழ்ந்து அழுது கொண்டே இருந்தார்.
ஸ்கூட்டி வந்த பிறகே, அபிராமியின் நட்பு வட்டம் விரிவடைந் துள்ளது.
விஜய் அலுவலகம் சென்ற பிறகு, இரு சக்கர வாகனத்தில் குன்றத்தூரை வலம் வருவாராம்,
அபிராமி. அப்படித் தான் சுந்தரத்துடன் நெருக்கம் அதிகரித்த தாக தற்போது தெரிய வந்துள்ளது.
அந்த வட்டாரத்தில் அபிராமியை மட்டுமே எல்லோரு க்கும் தெரிந்திருக் கிறது.
தற்போதைய அதிர்ச்சி சம்பவத்துக்குப் பிறகு தான் விஜயின் பெயரே வெளியில் தெரிய வந்திருக்கிறது.
Thanks for Your Comments