தற்போதைய கலாச்சாரத்தில் தொழில்நுட்பம் என்பது கலாச்சாரத் துடன் சேர்ந்து வளர்ந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கலாச்சாரங் களில் அதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது.
அதற்கு எடுத்துக் காட்டாகவே பேஸ்புக், வாட்ஸ்அப், மியூசிக்கல்லி போன்ற செயலிகள் மக்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் நிறைகளும் உண்டு. அதற்கு இணையாக குறைகளும் உண்டு.
பலர் இவற்றை தொழில்நுட்ப வளர்ச்சி என்றாலும், பலர் இவற்றை கலாச்சார சீரழிவு என கூறுகின்றனர். இந்நிலையில் தான் ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுக்கும் செயலி ஒன்று மும்பை மற்றும் புனேவில் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.
ஆண் நண்பர்கள், பெண் தோழிகள் மற்றும் காதலன்/ காதலியை தேர்ந்தெடு க்கும் செயலிகள் சில ஏற்கனவே இந்தியாவில் உள்ளன.
இருப்பினும் தற்போது வெளியிடப் பட்டுள்ள செயலி, வாடகைக்கு ஆண் நண்பர்களை தேர்ந்தெடுக்க கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த செயலி மூலம் பெண்கள் ஆண் நண்பர் ஒருவரை 2 மணி நேரம் வாடகைக்கு எடுக்க முடியும். அவருடன், அவர்கள் சினிமா, கோவில், உணவகம் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லலாம்.
ஆனால் சொகுசு விடுதிகள், ஓட்டல்கள் மற்றும் வீட்டிற்கு செல்லக் கூடாது. அவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. இதெல்லாம் விதிமுறைகள்.
பெண்களின் மன அழுத்தத்தை குறைப்பதற் காக இந்த புதிய செயலி கொண்டு வரப்பட்டுள்ள தாக செயலியை தயாரித்துள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.
Thanks for Your Comments