தமிழக பாடத்திட்டத்தில், வரும், 10ம் தேதி, காலாண்டு தேர்வுகள் துவங்கு கின்றன.
தமிழக அரசின், சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில், 1 முதல், 9ம் வகுப்பு வரை, முப்பருவ பாடத்திட்டம் பின்பற்றப் படுகிறது.
10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, ஒரே பருவ பாடத்திட்டம் அமலில் உள்ளது. முப்பருவ பாடத்திட்டத்தில், காலாண்டு தேர்வானது,
முதல் பருவ தேர்வாக நடத்தப் படுகிறது. மற்ற வகுப்பு களுக்கு, காலாண்டு தேர்வாக நடத்தப் படுகிறது.
இந்நிலையில் ,இந்த ஆண்டு, பருவ தேர்வு மற்றும் காலாண்டு தேர்வு, 10ம் தேதி துவங்க உள்ளது. உயர்நிலை
மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர் களுக்கு, செப்., 10; பஞ்சாயத்து, நகராட்சி கட்டுப் பாட்டில் உள்ள
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர் களுக்கு, செப்., 17ல் தேர்வுகள் துவங்கி, செப்., 22 வரை நடத்தப் படுகின்றன.
பின், 23ம் தேதி முதல், அக்., 2 வரை காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது. மீண்டும்,அக்., 3ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
Thanks for Your Comments