உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது விருதுநகர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி !

0
அருப்புக் கோட்டை தனியார் கல்லூரி மாணவி களை தவறான பாதைக்கு அழைத்த தாக கைது செய்யப் பட்டுள்ள 
அக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி 

ஆகிய 3 பேரும் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். 

நேற்று முன்தினம் கோர்ட்டு உத்தரவுப்படி இவர்கள் 3 பேரையும் ஆஜர் படுத்த இயலாத நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 

கால அவகாசம் கேட்டு விருதுநகர் 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்தனர்.

இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் இன்று விருதுநகர் கோர்ட்டில் ஆஜர் படுத்த மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி உத்தர விட்டார்.


அதன்படி மாணவி ளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் கைதான நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் இன்று ஆஜர்படுத்தப் பட்டனர். 

செப்.19 வரை அவர்களது காவலை நீட்டித்து விருதுநகர் நீதிமன்றம் உத்தர விட்டது.

விருதுநகர் நீதி மன்றத்தில், எனது உயிருக்கு சிறையில் அச்சுறுத்தல் உள்ளது என்று நிர்மலா தேவி புகார் கூறி உள்ளார்.

3 பேருக்கும் 1,360 பக்க குற்றப் பத்திரிகை நகல் வழங்கப் பட்டது. 

மேலும் மீண்டும் நாளை மறுநாள் பேராசிரியை நிர்மலா தேவி ஆஜராக விருதுநகர் நீதிமன்றம் ஆணை யிட்டுள்ளது.

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings