திருமண வாழ்க்கையை மீறி, மற்றொருவருடன் தகாத உறவு வைத்துக் கொள்வதை குற்றமாக பார்க்கும், 158 ஆண்டு கள் பழமையான,
இந்திய தண்டனை சட்டத்தின், 497வது பிரிவை நீக்கி, உச்ச நீதி மன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட, அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.
'இந்த சட்டம், ஆண்களுக்கு கட்டுப் பட்டவர் களாக பெண்களை சித்தரிக்கிறது;
பெண்களின் தனித்துவம் மற்றும் சுதந்திரத்துக்கு எதிராக உள்ளது' என, நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
பலாத்காரமாகாது
திருமண வாழ்க்கையை மீறி, மற்றொரு வரு டன் உறவு வைத்துக் கொள்வதை குற்றமாக பார்க்கும், இந்திய தண்டனை சட்டத்தின்,
497 வது பிரிவை எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடர பட்டன.
இந்த சட்டத்தின் படி, 'தனக்கு அறிமுகமான பெண்ணுடன், அவரின் கணவருடைய ஒப்புதல்
இல்லாமல், ஒரு ஆண் உடலுறவு கொண்டால், அது பலாத்கார மாகாது; அது தகாத உறவாக பார்க்கப்படும்' என, கூறப்பட்டு உள்ளது.
இந்த குற்றத்தில் ஈடுபடும் ஆணுக்கு, 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம்
அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.'இந்த சட்டம், பெண்களுக்கு எதிரானதாக உள்ளது.
கணவனுக்கு கட்டுப் பட்டவராக பெண் இருக்க வேண்டும் என்பதையே இந்த சட்டம் கூறுகிறது.
'இது, பெண்களின் தனித்துவம், பாலின சம உரிமை, தனக்கு தேவையானதை தேர்வு செய்யும் உரிமையை மீறுவதாக உள்ளது' என, சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
அதே நேரத்தில், 'இந்த சட்டத்தில், ஆண்கள் மீது மட்டுமே குற்றம் பதிவு செய்யப் படுகிறது;
பெண்களை பாதிக்கப் பட்டவர்களாக பார்க்கின்றனர்.
பாலின சம உரிமை உள்ள நிலையில், பெண்களு க்கும் தண்டனை அளிக்க வேண்டும்
அல்லது சட்டத்தை நீக்க வேண்டும்' என, சிலர் வழக்கு தொடர்ந் திருந்தனர்.
இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஆர்.எப். நரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா அடங்கிய,
உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.நேற்று அளிக்கப்பட்ட, ஒருமித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ள தாவது:
திருமணஉறவுக்கு அப்பாற்பட்டு, மற்றொருவருடன் உறவு கொள்வது குற்றம் என்பது, பழங்கால சட்டமாகும்.
இது, பெண்களுக்கு எதிரானதாக உள்ளது. ஆணுக்கு கட்டுப் பட்டவராக பெண் இருக்க வேண்டும் என்பதாகவே இந்த சட்டம் உள்ளது.
இது, பெண்களுக் கான தனித்துவம், தனக்கு விருப்பமானதை தேர்வு செய்யும் உரிமை, தனி மனித சுதந்திரம், பாலின சம உரிமைக்கு எதிராக உள்ளது.
விவாகரத்து
தகாத உறவு என்பது, திருமண உறவை பாதிக்காது. அதே நேரத்தில், திருமண உறவில் பாதிப்பு இருந்தால், தகாத உறவுக்கு வழி வகுத்து விடும்.
அதனால், தகாத உறவை குற்றமாக பார்க்க வேண்டியதில்லை. இந்திய தண்டனைச் சட்டத்தின்,
497வது பிரிவு மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின், 198வது பிரிவு ஆகியவை,
அரசிய லமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிராக உள்ளதால், அவை சட்ட விரோதமானவை என, அறிவிக்கப் படுகிறது.
தகாத உறவு வைத்துக் கொள்வதை குற்றமாக பார்க்கக் கூடாது. அதே நேரத்தில், இது தவறு தான்.
சிவில் சட்டங்களின் படி, தகாத உறவு குறித்து விசாரிக்கலாம்.தகாத உறவால், ஒருவர் தற்கொலை செய்து கொண்டால்,
அதற்கான ஆதாரங்கள் இருந்தால், தற்கொலையைத் துாண்டிய தாக வழக்கு தொடரலாம்.
அதே போல், தகாத உறவால் பாதிக்கப் பட்டவர், சிவில் சட்டங்களின் படி, விவாகரத்து கோர முடியும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட் டுள்ளது.
Thanks for Your Comments