புழல் சிறையில் நடத்தப்பட்ட அதிரடி ரெய்டில் கைதிகள் அறை யிலிருந்து ஆடம்பரப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
வெளியில் தப்பு செய்த கைதிகளை சிறையில் அடைப்பதற்கு காரணமே அந்த சூழல் அவர்களை திருத்தும் என்றும்,
அந்த தனிமையானது அவர்களுக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதற்காகத் தான்.
ஆனால் அதற்கு நேர்மாறாக கைதிகளுக்கு வசதியூட்டும் வகையில் காவலர்கள் சிலர் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு கஞ்சா,
செல்போன், மது, வீட்டு சாப்பாடு, டிவி ஆகியவற்றை சப்ளை செய்து வருவதாக வெகு நாட்களாக புகார் எழுந்து வந்தது.
இதனை யடுத்து நேற்று ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது கைதிகளுக்கு வெளியி லிருந்து கொண்டு வரப்பட்ட சாப்பாடு, சொகுசு அறை, செல்போன், கஞ்சா பொட்டலங்கள், டிவிக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டன.
இது தொடர்பான புகைப்படம் வெளியானதால் சிறையில் சொகுசு வசதி செய்து கொடுத்திருப்பது அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
இதுகுறித்து பேசிய ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா கைதிகளுக்கு இவ்வளவு வசதிகளையும் செய்து கொடுத்தது யார்?
அதன் பின்னணியில் இருப்பது யார் என்று விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.
வெளியில் இருப்பதை விட கைதிகள் சிறையில் ஜாலியாக இருப்பதைப் பார்த்த பொது மக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி யுள்ளனர்.
Thanks for Your Comments