வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் உள்ள சென்ட்ரல் விலங்கியல் பூங்காவில்
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தருவிக்கப் பட்ட உயிரினங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
அதில் மிகவும் சுட்டித்தனமாக இருக்கும் சிம்பன்ஸி வகை குரங்கு ஒன்று அங்கு உள்ளது. இந்த குரங்கிற்கு ஆஸெலா என்று பெயரிடப் பட்டுள்ளது.
பூங்காவில் இருக்கும் ஆஸெலா மனிதர்களைப் போன்றே புகைப் பிடிக்கும் காட்சி இணைய த்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் ஒரு சிகரெட்டில் இருந்து மற்றொரு சிகரெட்டைப் பற்ற வைத்து வாயிலிருந்து புகை விடுகிறது.
ஆஸெலா புகைப் பிடிக்கும் அழகைப் பார்க்கவும், அதன் சேட்டை களை ரசிக்கவும் அந்த விலங்கியல் பூங்காவிற்கு ஏராளமான மக்கள் செல்கின்றனர்.
Thanks for Your Comments