உலக அளவில் சவுதி அரேபியா எண்ணெய் ஏற்றுமதி, பொருளாதாரம் என வளர்ச்சி யடைந்து காணப் பட்டாலும்,
இன்னும் பெண்களுக்கு எதிரான கெடு பிடியான சட்டங்களை கடைப் பிடித்து வருகிறது.
இது தங்களுடைய மரபு என்றும் அதனை மீறினால் நிச்சயமாக கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் எகிப்திய இளைஞர் ஒருவர் முஸ்லீம் பெண்ணுடன் காலை உணவருந்தி விட்டு, வீடியோ எடுத்து அதனை இணைய த்தில் வெளியிட் டுள்ளார்.
இந்த வீடியோ இணைய வாசிகளால் அதிகளவு பகிரப்பட்டதை அடுத்து, சவுதி அரேபியா தொழிலாளர் அமைச்சகம்
எகிப்திய மனிதரை கைது செய்ததுடன், விசாரணைக் காக ஓட்டல் உரிமை யாளரையும் அழைத் துள்ளனர்.
இது குறித்து கூறிய தொழிலாளர் அமைச்சகம், முஸ்லீம் பெண்களை பணியமர்த்து வதற்கான விதிமுறை களை
மீறியதால் உரிமையாளர் விசாரணைக்கு அழைக்கப் பட்டதாகவும், சவுதி விதிமுறை களை மீறியதால் தான்
எகிப்திய இளைஞர் கைது செய்யப் பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.
Thanks for Your Comments