அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் (NSG) தற்போது 48 நாடுகள் உறுப்பினர் களாக உள்ளன.
இந்த குழுவில் இடம் பெற இந்தியாவும், பாகிஸ்தானும் விண்ணப்பித் துள்ளன.
அணுசக்தி வினியோகக் குழுவில் இடம் பிடிப்பதன் மூலம் இந்தியாவில் அணு மின் உற்பத்தியை மேம்படுத்த முடியும்.
அது பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் கை கொடுக்கும் என்பதால், அந்த குழுவில் இடம் பெற இந்தியா தீவிர முயற்சி களை மேற்கொண்டு வருகிறது.
பிரதமர் மோடி கடந்த சில மாதங்களாக நாடு, நாடாக சென்று இதற்கு ஆதரவு திரட்டி வந்தார்.
அதன் பயனாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜப்பான், அர்ஜெண்டினா, தென்கொரியா,
மெக்சிகோ, சுவிட்சர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, ரஷியா உள்பட பல நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
என்றாலும் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தால் கூட, அதில் புதிய உறுப்பினரை சேர்க்க முடியாது
என்பதால் எதிர்ப்பு நாடுகளின் ஆதரவைப் பெற இந்தியா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டது.
இந்த குழுவில் உள்ள சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் இந்தியாவை சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வில்லை என்பதை காரணம் காட்டி, இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு காட்டி வருகிறது.
இந்த நிலையில், அணுசக்தி விநியோக குழுவில் இடம் பெற இந்தியாவு க்கு முழு தகுதி இருப்பதா கவும்,
சீனாவின் எதிர்ப்பால் இந்தியாவில் இடம் பெற முடிய வில்லை என்று அமெரிக்கா தெரிவித் துள்ளது.
மேலும், இந்தக்குழுவில் இந்தியா இடம் பெற ஆக்கப் பூர்வமாக வாதாடுவோம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Thanks for Your Comments