கணவர் தனிக்குடுத்தனம் வர மறுத்ததால் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை !

0
தனது கணவர் தனிக்குடுத்தனம் வர மறுத்ததால் மனவேதனை யில் இளம் பெண்ணொருவர் 
தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவ மொன்று கடலூரில் இடம் பெற்றுள்ளது.

தமிழகம்- கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் மாலதி (32). 

இவருக்கும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ரவிசங்கர் (35) என்பவரு க்கும் கடந்த 5 மாதங்களு க்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பின்னர் மாலதி தனது கணவர், மாமனார், மாமியா ருடன் சென்னையில் வசித்து வந்தார்.

மாலதி ரவிசங்கரிடம் தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென வற்புறுத்தி வந்துள்ளார்.


இதற்கு ரவிசங்கர் ஒத்துக் கொள்ள வில்லை. இதனால் மாலதி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

வீட்டிற்கு சென்ற மாலதி மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.

இந்நிலையில் வீட்டில் யாருமில்லா நேரத்தில் மாலதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவற் துறையினர், மாலதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

திருமணமாக 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings