காங்கிரஸ் நிர்வாகி ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த தனது மகனை,
மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
ஹட்டா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் உமா தேவி காதிக். இவரது மகனான பிரின்ஸ் லால்சந்த் காதிக்,
அம்மாநில காங்கிரஸ் நிர்வாகியும். எம்.பி.யு மான ஜோதிராதித்ய சிந்தியாவை சுட்டுக் கொல்லப் போவதாக ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுத்தார்.
இதை அடுத்து காங்கிரஸ் இளைஞரணி கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
தமது மகனின் செயலுக்காக வருத்தம் தெரிவித்துள்ள உமா தேவி, தமது மகன் நிச்சயம் சிறை சென்றே ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பிரின்ஸ் லால்சந்தை, அவரே காவல் நிலையம் அழைத்துச் சென்று ஒப்படைத்தார்.
Thanks for Your Comments