இலவச நீட் பயிற்சி மையங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
பின்னர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களு க்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் பயிற்சி மையம் மற்றும் ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பர்.
உயர்கல்வி படிக்க 11ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது;
12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படை யிலேயே உயர்கல்வி படிக்கச் செல்லலாம். 600 மதிப்பெண் வீதம் +1, +2 மாணவர் களுக்கு தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் தரப்படும்.
11ஆம் வகுப்பு கடினமாக இருப்பதா கவும், அதனை உயர் கல்விக்கு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப் பட்டது.
உயர்கல்வி படிக்க 12ம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதும் என கூறினார்.
Thanks for Your Comments