கோபி அருகே ரூ.1 கோடி மதிப்பீட்டில் கடந்த 3 மாதங்களுக்கு முன் கட்டப்பட்ட பாலம் மழை நீரில் சேத மடைந்தது.
கோபி அருகே உள்ள நம்பியூர் கெடாரை என்ற கிராமத்தில் இருந்து வெள்ளாள பாளையம்,
அம்பேத்கர் காலணிக்கு செல்ல கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மழைநீர் ஓடையின் குறுக்கே பாலம் கட்டப் பட்டது.
இந்த பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
நேற்று முன்தினம் நம்பியூர், கெடாரை மற்றும் சுற்றுப்புற பகுதியில் பெய்த கனமழை காரணமாக மழைநீர் ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தரையில் இருந்து சுமார் 5அடி உயரத்தில் பாலம் அமைக்கப் பட்டுள்ள தால், வெள்ளநீர் அதிகளவு வந்ததால் பாலத்தின் மேல் தண்ணீர் சென்றது.
அதில் பாலத்தின் இருபுறம் புதியதாக போடப்பட்ட தார்சாலை மற்றும் கான்கிரீட்டால் போடப்பட்ட பக்கவாட்டு சுவர் உடைந்தது.
இதனால் இரண்டு கிராமத்திற் கிடையே போக்குவரத்து துண்டிக்கப் பட்டது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: வெள்ளாளா பாளையம் அம்பேத்கார் காலணிக்கு என தார் சாலையுடன் கூடிய பாலம் கட்டப்பட்டு 3 மாதமே ஆகிறது.
இதற்காக நபார்டு வங்கி ரூ.80 லட்சம் கடன் வழங்கியுள்ளது.
இந்த பாலம் கட்டும் பணி மற்றும் தார்சாலை அமைக்கும் பணியை திருப்பூரை சேர்ந்த ஒப்பந்ததார் செய்துள்ளார்.
சுமார் 10 மீட்டர் நீளமுடைய பாலம் மற்றும் ஒரு கிலோ மீட்டர் தார் சாலை அமைக்க ரூ.1 கோடி ரூபாய் வழங்கப்பட்டும் ஒரு நாள் மழைக்கே அடித்துச் செல்லப் பட்டுள்ளது.
இது தரமற்ற முறையில் கட்டப் பட்டுள்ளதை எடுத்துக் காட்டுகிறது.
அதனால் அந்த பாலம் மற்றும் தார்சாலை அமைத்த ஒப்பந்ததாரரை மீண்டும் புதியதாக தார் சாலை அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Thanks for Your Comments