பூமியானது சூரியனின் சுற்று வட்ட பாதையில் சுற்றி வருவதை கிரகண பாதை என்று அழைக்கின்றோம்.
சந்திரனும் பூமியை சிறு வட்டப் பாதையில் சுற்றி வருகின்றது.
ஆனால் சந்திரனின் சுற்றுப் பாதை சரியான கிரகண பாதையில் அமைய வில்லை. அது சுமார் 5 டிகிரி சாய்வு கோணத்தில் அமைந்துள்ளது.
இதனால் மிக அரிதாக நிலவு பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் உள்ள கற்பனைக் கோட்டை கடக்கும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
எனவே சந்திரனின் பாதை கிரகண பாதையோடு ஒன்றியிருக்கும் போது அமாவாசையின் போது
சூரிய கிரகணமும் பவுர்ணமியின் போது சந்திர கிரகணமும் நிகழ்கிறது.
இந்த கிரகணம் மேற்கு வட அமெரிக்கா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும்
பசிபிக் பெருங்கடல் போன்ற பெரும் பாலான பகுதிகளிலும், இந்தியாவிலும் தெரியும்.
சந்திர கிரகணத்தை திறந்த வெளியில் தொலை நோக்கியின்றி கண்டுகளிக்க லாம்.
விண்வெளியில் வெறும் கண்களால் பார்க்கும் போது பாதிப்பு ஏதும் ஏற்படாது.
மேலும் ஒரு முழு சந்திர கிரகணத்தை இந்தியாவில் 27.7.18 இரவு முதல் 28.7.18 வரை வரை காணலாம்.
இன்று (31ம் தேதி) நிலவானது பூமியின் சுற்றுப் பாதையில் அருகில் வருவதால் சற்று பெரியதாக காணப்படும்.
2018ம் ஆண்டில் தெரிகின்ற 2வது சூப்பர் மூன் இது தான். இதற்கு முன் கடந்த 2ம் தேதி சூப்பர் மூன் தென்பட்டது.
இந்த மாதத்திலேயே இரண்டு முறை பவுர்ணமி தென்படுவதால் இதனை நீல நிலவு (ப்ளூ மூன்) என்றழைக்கப் படுகிறது.
இதேபோல் வரும் மார்ச் மாதம் இரண்டு பவுர்ணமி ஏற்படுகிறது.
மார்ச் 31ம் தேதி ஏற்படுகின்ற பவுர்ணமி அடுத்த நீலநிலவு ஆகும். முழு சந்திர கிரகணம் நீல நிலவில் தென்படுவது மிகவும் அரிதானது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கிரகணம் தான் நாளை தென்படுகிறது. இது மீண்டும் 152 ஆண்டுகளுக்கு பின்னர் காணலாம்.
இது போன்ற நிகழ்வு கடந்த 1866 மார்ச் 31ம் தேதி ஏற்பட்டது.
Thanks for Your Comments