சென்னை, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் செமி புல்லட் ரயில் நேற்று அறிமுகம் செய்யப் பட்டது.
விரைவில் பயன்பாட்டிற்கு வரும் இந்த புதிய அதிவேக ரயில் குறித்த 18 முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.
மேட் இன் சென்னை
'டிரெயின் - 18' என்ற பெயரில் அழைக்கப்பபடும் இந்த புதிய அதிவேக ரயில், பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ்
சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற் சாலையில் வெறும் 18 மாதங்களில் உருவாக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப் பட்டுள்ளது.
இந்த ரயிலில் 85 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு உதிரி பாகங்கள் பொருத்தப் பட்டுள்ளன.
வண்ணக் கலவை
புல்லட் ரயில் போன்ற தோற்றத்தை பெற்றிருக்கும் இந்த டிரெயின் - 18 ரயிலானது வெள்ளை
மற்றும் அடர் நீல வண்ணத்தில் பெயிண்ட்டிங் செய்யப் பட்டுள்ளது.
வெளிப்புறத்தில் மின்னணு தகவல் பலகை மூலமாக ரயில் விபரத்தை பயணிகள் தெரிந்து கொள்ள முடியும்.
புல்லட் ரயில் சாயல்
வெளிநாடுகளில் ஓடும் புல்லட் ரயில்களை போன்ற தோற்றத்திலும், தொழில் நுட்பத்திலும் டிரெயின் - 18 ரயில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ரயிலில் தனி எஞ்சின் இல்லாமல், ஒவ்வொரு ரயில் பெட்டிகளிலும் மின் மோட்டார் பொருத்தப்பட்டு ரயில் இயங்குகிறது.
இடவசதி
இந்த அதிவேக ரயிலில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஓட்டுனர் அறையி லிருந்து கடைசி பெட்டி வரை தடை இல்லாமல் நடந்து செல்ல முடியும்.
மேலும், ஓட்டுனர் அறை உள்ள பெட்டியிலும் பயணி களுக்கான இருக்கைகள் பொருத்தப்பட்டு இருப்பதால், இடவசதி சிறப்பாக கையாளப் பட்டுள்ளது.
தனி ரயில் எஞ்சின் இல்லை
தனி ரயில் எஞ்சின் இணைக்கும் அவசியம் இல்லை என்பதுடன், சென்னை யில் ஓடும் மின்சார ரயில்கள்
மற்றும் மெட்ரோ ரயில் போன்று, இந்த ரயிலின் இருபுறத்திலும் ஓட்டுனர் களுக்கான கேபின் அமைக்கப் பட்டுள்ளது.
அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த ரயிலை எளிதாகவும்,
பாதுகாப்பாக வும் இயக்குவதற்கு ஏதுவாக கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
தானியங்கி கதவுகள்
பெட்டிகளுக்கு நடுவில் கதவுகள் பொருத்தப் பட்டுள்ளன. அனைத்து கதவுகளும் மெட்ரோ ரயில் போலவே, தானியங்கி முறையில் செயல்படும்.
கதவுகளில் சென்சார் இருப்பதால், பயணிகள் அவசரத்தில் ஏறும் போது, கதவுகள் திறந்து கொள்ளும் வசதி இருக்கிறது.
தானியங்கி படிக்கட்டுகள்
படிக்கட்டுகளும் தானியங்கி முறையில் செயல்படும். படிக்கட்டுகளில் ஏறும் போது பொருட்களை பயணிகள் தவற விட்டால்,
அது கீழே செல்லாத வகையில் தடுப்பு வசதிகளும் கொடுக்கப் பட்டுள்ளன.
ரயில் புறப்பட்ட உடன், படிக்கட்டுகள் உள்ளே சென்று விடும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.
இருக்கை வசதிகள்
இந்த ரயிலில் எக்ஸ்கியூட்டிவ் எனப்படும் உயர் வகுப்பு இருக்கைகள் கொண்ட இரண்டு பெட்டிகளும்,
இரண்டாம் வகுப்பு இருக்கைகள் கொண்ட 14 பெட்டிகளும் இணைக்கப் பட்டுள்ளன.
எக்ஸ்கியூட்டிவ் பெட்டிகளில் இருக்கைகளை 180 டிகிரி கோணத்தில் திருப்ப முடியும்.
அதாவது, ரயில் செல்லும் திசையில் முன்னோக்கி பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் மாற்ற முடியும்.
எக்ஸ்கியூட்டிவ் பெட்டிகளில் இதனை பட்டன் மூலமாக இயக்க முடியும். இது நிச்சயம் வரவேற்கத்தக்க விஷயமாக இருக்கும்.
இந்த ரயிலில் பெட்டிகளை சாய்ப்பதற்கு பின்னோக்கி சாய்க்காமல், முன்னோக்கி தள்ளி சாய்த்துக் கொள்ளும் வகையில் கொடுக்கப் பட்டுள்ளது.
இதனால், பின்னால் இருக்கையில் அமர்ந்திருப் பவர்களுக்கு தொந்தரவு இல்லாத சூழலுக்கு உத்தரவாதம்.
மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலி களுடன் ரயிலில் பயணிப்பதற்கு ஏதுவாக,
ஓட்டுனர் அறைக்கு அருகில் வழியும், இடமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
வசதிகள்
இந்த ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் சிறிய உணவுப் பொருட்கள் விற்பனையகம் இருக்கும்.
ரயில் சென்று கொண்டிருக்கும் போது பயணிகள் பெட்டிகளு க்குள் பாதுகாப்பாக
நடந்து செல்லும் வகையில், இருக்கைகளில் விசேஷ கைப்பிடிகளும் கொடுக்கப் பட்டுள்ளது.
ஜிபிஎஸ் அடிப்படையில் ரயில் நிலையங்கள் குறித்த அறிவிப்புகள், சிசிடிவி கேமரா உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.
விசேஷ விளக்குகள்
ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் இந்த ரயிலில் கொடுக்கப்பட இருக்கிறது. மேலும், வெளியில் இருக்கும் வெளிச்சத்தை பொறுத்து
இந்த ரயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டு இருக்கும் விளக்குகளின் பிரகாசத்தை கூட்டிக் குறைக்க முடியும்.
அதிர்வுகள்
குறைவான பயணம் மிகச் சிறப்பான சப்த தடுப்பு அமைப்பு கொடுக்கப்பட்டு இருப்பதுடன், இந்த ரயில் அதிர்வுகள் மிக குறைவான பயண அனுபவத்தை வழங்கும்.
இந்த ரயிலில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு இருப்பதால், தூசி, தும்பட்டிகள் ரயில் பெட்டிகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக தெரிவிக்கப் படுகிறது.
விசாலமான ஜன்னல்கள்
இந்த ரயிலில் மிகப் பெரிய ஜன்னல் கண்ணாடிகள் பொருத்தப் பட்டுள்ளன.
இதனால், மிக விசாலமான பார்வையை பயணிகளுக்கு வழங்கும். வெளிச்சத்தை
தடுப்பதற்கு வசதியாக, ஜன்னல்களில் ஷன் ஷேட் வசதியும் இருக்கிறது. இது புதுவித பயண அனுபவத்தை வழங்கும் என்பதில் ஐயமில்லை.
சிறப்பான கட்டமைப்பு
டிரெயின் - 18 ரயில் பெட்டிகளில் பெரும்பாலான கருவிகள், சாதனங்கள் அனைத்தும்
ரயில் பெட்டியின் தரை தளத்திற்கு கீழாக கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
எனவே, ரயில் பெட்டிக்குள் கச்சா முச்சா என எந்த வேலையும் இல்லாமல் வெளிநாட்டு ரயில்களு க்கு இணையான தரத்துடன் காட்சியளிக்கிறது.
அதிக இடவசதியை உணர முடியும்.
பொழுதுபோக்கு வசதிகள்
இந்த ரயிலில் இருக்கைகள் மிக சொகுசாகவும், தீப்பிடிக்காத தன்மையும் கொண்டதுடன் மிக விசாலமான இடவசதியை அளிக்கும்.
பயணிகளுக்கு வைஃபை இன்டர்நெட் வசதியும் அளிக்கப்படும்.
இதனால், தங்களது மொபைல் போன், லேப்டாப் கம்ப்யூட்டருடன் பயணத்தை எளிதாக பொழுது போக்க முடியும்.
பயோ டாய்லெட்
பயோ டாய்லெட் பொருத்தப்பட்டு இருப்பதுடன், தானியங்கி தண்ணீர் குழாய்கள்
இருப்பதால் சுகாதாரமான அனுபவத்தை இந்த ரயிலின் கழிவறைகள் வழங்கும்.
மேலும், உயர்தரமான தண்ணீர் குழாய்கள் மற்றும் பாகங்களுடன் கழிவறை வடிவமைக்கப் பட்டு இருக்கிறது.
தனி எஞ்சின் இல்லை
இந்த ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் மின் மோட்டார்கள் பொருத்தப் பட்டுள்ளன.
மேலும், தனி ரயில் எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில்களை விட இந்த முறையில்
இயக்கப்படும் ரயில்கள் மிக விரைவான பிக்கப்பையும் வழங்கு வதுடன், விரைவாக நிறுத்தவும் முடியும்.
விரைவான பயணம்
இதனால், தனி எஞ்சின் பொருத்தப் பட்ட ரயில்களை விட பயண நேரம் 15 சதவீதம் வரை குறையும்.
இந்த ரயில் மணிக்கு 160 கிமீ வேகம் வரை இயக்க முடியும் அதிக மின் சிக்கனம், சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும்.
இந்த ரயிலில் பிரேக் ஆற்றலை பேட்டரியில் சேமிக்கும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.
அதிவேக ரயில்
சதாப்தி ரயிலுக்கு மாற்றாக புதிய டிரெயின் - 18 ரயில் சேவைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.
டெல்லி - போபால் இடையிலான சதாப்தி ரயிலாக புத்தாண்டில் சேவைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் சேவைக்கு வரும் போது, இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெருமையை பெறும்.
சென்னை ஐசிஎஃப்
வெறும் 18 மாதங்களில் இந்த ரயிலை சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை உருவாக்கி அசத்தி இருக்கிறது.
இந்த ரயில் ரூ.100 கோடி மதிப்பில் தயாரிக்கப் பட்டுள்ளதாக வும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளி லிருந்து இதே அம்சங்கள் கொண்ட ரயிலைவிட குறைவான மதிப்பீல் இந்த ரயிலை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
2018 - 19ம் நிதி ஆண்டில் அடுத்து ஒரு டிரெயின் 18 ரயிலும், 2019 - 20ம் நிதி ஆண்டில் 4 டிரெயின் 18 ரயில்களும் தயாரிக்கப்பட இருக்கின்றன.
புல்லட் ரயிலை விட இந்த புதிய அதிவேக ரயில் பல்வேறு விதத்திலும் சிறப்பானதாக தெரிவிக்கப் படுகிறது.
ஏற்கனவே இருக்கும் தடங்களிலேயே இதனை இயக்கும் வகையில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
அத்துடன், இந்த ரயிலை மேம்படுத்தும் போது வேகத்தை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments