18 எம்எல்ஏக்கள் வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் - தயாநிதிமாறன் !

0
அதிமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் தயாநிதிமாறன் பேசியுள்ளார். 
சென்னை மேற்கு மற்றும் அண்ணாநகர் தெற்கு பகுதி திமுக சார்பில், ஊழல் நிறைந்த மக்கள் விரோத அதிமுக அரசை 

கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் நேற்று நடந்தது. 


அண்ணாநகர் தெற்கு பகுதி செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் 

ஜெ.அன்பழகன், அண்ணாநகர் எம்எல்ஏ எம்.கே.மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் திமுக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் தயாநிதிமாறன் பேசியதாவது: 

அண்ணாநகரை உருவாக்கியவர் கலைஞர். அவர் தற்போது நம்முடன் இல்லை. அவருக்கு பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். 

அதிமுக வினர் மானம், மரியாதை இல்லாமல் ஆட்சி செய்கிறார்கள். 

கலெக்‌ஷன், கமிஷன், கரெப்ஷன் என்ற அடிப்படையில் ஆட்சி நடத்து கிறார்கள். இந்த ஆட்சி வாரம் மற்றும் நாட்களில் கணக்கிடப் படுகிறது.

18 எம்எல்ஏ க்கள் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். நாடாளுமன்ற எம்பி நிதியில் இருந்து மேத்தா நகர் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டது. 

ஜெயலலிதா உடல்நிலை குறித்து அதிமுக வினர் உண்மையை சொல்ல வில்லை.

ஒருவர் திடீர் தியானம் செய்து ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக தெரிவிக்கிறார். 

மற்றொருவர் சசிகலா சொன்னதால் தான் முதல்வர் ஆனார். சென்னை ஆர்.கே. நகர் தேர்தலின் போது

டிடிவி. தினகரனுக்கு ஓட்டு கேட்டவர் தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 


இப்போது அவரே டிடிவி.தினகரனை ஊழல்வாதி என்று கூறுகிறார். மின்துறை அமைச்சர் தங்கமணி மீது காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது. 

உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மீது 3,000 பக்கங்கள் ஆதாரத்துடன் ஊழல் புகார் கொடுக்கப் பட்டது. 

ஆ.ராசா மீதும், என் மீதும் புகார் தெரிவித்த போது நாங்கள் பதவியை ராஜினமா செய்து வழக்கை சந்தித்து வெற்றி பெற்றோம். 

பதவிக்காக ஆசைப்படுவது திமுக இல்லை. எட்டு வழிச்சாலை திட்டத்தில் விவசாய நிலங்களை அபகரிப்பதை ஏற்க முடியாது. 

சென்னையில் மெட்ரோ ரயில் கொண்டு வந்தது திமுக ஆட்சி தான். இவ்வாறு தயாநிதி
மாறன் பேசினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings