இந்தோனேஷியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான ‘லயன் ஏர்’ நிறுவனம்,
உள்நாடு மற்றும் பல்வேறு வெளி நாடுகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது.
இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங்-737 மேக்ஸ் 8’ ரக விமானம் ஒன்று
நேற்று காலை 6.20 மணிக்கு தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து, பங்கல் பினாங் நகருக்கு புறப்பட்டது.
இந்த விமானத்தை இந்திய விமானி பாவ்யே சுனேஜா இயக்கினார். துணை விமானியாக ஹார்வினோ பணியாற்றினார்.
இதில் குழந்தைகள் உள்பட 181 பயணிகளும், 8 ஊழியர்களு மாக 189 பேர் இருந்தனர்.
இந்த விமானம் 1 மணி 10 நிமிடங்களில் பங்கல் பினாங்கு நகருக்கு சென்றடைய வேண்டும்.
ஆனால் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட 13-வது நிமிடத்திலேயே விமானம், கட்டுப்பாட்டு அறை யுடனான தொடர்பை இழந்தது.
பின்னர் சில நிமிடங்களில் அந்த விமானம் ஜாவா தீவுக்கு அருகே கடலில் விழுந்து மூழ்கியது.
அந்த பகுதி 30 முதல் 35 மீட்டர் வரை ஆழம் உள்ள பகுதியாகும்.
விமானம் கடலில் விழுந்து மூழ்கியதை இந்தோனேஷிய மீட்பு நிறுவன செய்தி தொடர்பாளர் யூசுப் லத்தீப் உறுதி செய்தார்.
இதைப் போல ‘லயன் ஏர்’ நிறுவன விமானம் ஒன்று கடலில் விழுவதை நேரில்
பார்த்ததாக சம்பவத்தின் போது கடலில் விசைப்படகில் இருந்த ஒருவரும் தெரிவித்தார்.
பார்த்ததாக சம்பவத்தின் போது கடலில் விசைப்படகில் இருந்த ஒருவரும் தெரிவித்தார்.
189 பயணிகளுடன் விமானம் கடலில் விழுந்து மூழ்கிய சம்பவம் விமான நிறுவன அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் இந்தோனேஷிய அரசு உடனடியாக மீட்புக் குழுவினரை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தது.
அதன்படி மீட்புக் கப்பல்கள், ஆழ்கடலில் மூழ்கி தேடும் வீரர்கள் மற்றும் நீச்சல் குழுவினர் அங்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.
மேலும் விமானப் படையினரின் உதவியையும் இந்தோனேஷிய பேரிடர் மீட்புக் குழுவினர் நாடினார்கள்.
இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் உள்பட 189 பேரும் உயிரிழந் திருக்கலாம் என
அஞ்சப் படுவதாகவும், யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானம் விழுந்த பகுதியில் பயணிகளின் புத்தகங்கள், செல்போன், பைகள் மற்றும்
விமானத்தின் உடைந்த பாகங்கள், இருக்கைகள் சிதறிக் கிடந்தன. அவற்றையும் மீட்புக் குழுவினர் மீட்டனர்.
விமானம் விழுந்த பகுதியில் அதன் எரிபொருள் கடலில் சிதறிக் கிடப்பதையும்,
விமானத்தின் உடைந்த பாகங்கள் மிதப்பதையும் இந்தோனேஷிய தொலைக்காட்சி நிறுவனங்கள் தொடர்ந்து ஒளி பரப்பி வருகின்றன.
விமானம் விபத்தில் சிக்கியதை அறிந்த பயணிகளின் உறவினர்கள் பங்கல் பினாங் விமான நிலையத்தில் சோகமாக காத்துக் கிடக்கின்றனர்.
அவர்களுக்காக உதவி மையங்கள் திறக்கப் பட்டன.
விமானத்தை இயக்கிய விமானி பாவ்யே சுனேஜா (வயது 31) டெல்லியின் மயூர் விகார் பகுதியை சேர்ந்தவர்.
பெல் ஏர் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் விமானியாக பயிற்சி பெற்ற இவர் எமிரேட் விமான நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.
பின்னர் லயன் ஏர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். கடந்த 2011-ம் ஆண்டு முதல் லயன் ஏர் நிறுவனத்தில்
பணியாற்றி வரும் சுனேஜா 6 ஆயிரம் மணி நேரம் விமானம் இயக்கிய அனுபவம் வாய்ந்தவர்.
இவர் தற்போது ஜகார்த்தாவில் வசித்து வந்தார். இதைப் போல துணை விமானி
ஹார்வினோவும் 5 ஆயிரம் மணி நேரத்துக்கு மேல் விமானம் ஓட்டிய அனுபவம் பெற்றவர் ஆவார்.
விபத்துக் குள்ளான விமானத்தை கடந்த ஆகஸ்டு மாதம் தான் லயன் ஏர் நிறுவனம் வாங்கி யிருந்தது.
800 மணி நேர பயண அனுபவம் பெற்றிருந்த இந்த விமானம் இயக்குவதற்கு சாத்தியமானது என்றே சான்றிதழ் பெறப்பட்டு இருந்தது.
அப்படியிருக்க விமானம் விபத்தில் சிக்கியதற் கான காரணம் குறித்து தெரிய வில்லை.
இதைப்போல விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்,
விமானத்தை மீண்டும் விமான நிலையத்துக்கே திருப்புமாறு கட்டுப்பாட்டு அறை
அதிகாரிகள் விமானி களிடம் தெரிவித்த தாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கான காரணமும் வெளியிடப் படவில்லை. எனவே விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
ஜகார்த்தா விமான விபத்தில் இந்திய விமானி உள்பட 189 உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘எனது எண்ண மெல்லாம்
இந்தோனேஷிய விமான விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனேயே இருக்கிறது.
துயரமான இந்த தருணத்தில் இருந்து அவர்கள் மீண்டு வருவதற்கான பலத்தை கடவுள் அருளட்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதைப் போல ஜகார்த்தாவில் உள்ள இந்திய தூதரகமும் விமான விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்துக்கு அனுதாபம் தெரிவித்து உள்ளது.
இந்த சம்பவத்தில் இந்திய விமான உயிரிழந்தது மிகவும் துரதிர்ஷ்டவச மானது என்று கூறியுள்ள தூதரக அதிகாரிகள்,
அங்கு மீட்பு உதவிகளை ஒருங்கிணைப்ப தற்காக மீட்புக் குழுவினருடன் தொடர்பில் இருப்ப தாகவும் தெரிவித்தனர்.
189 பேருடன் விமானம் கடலில் விழுந்து விபத்துக் குள்ளான சம்பவம் இந்தோனேஷியா வில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அங்கு சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் நிகழ்ந்த சோக வடுக்கள்
ஆறுவதற்கு முன் மற்றுமொரு பயங்கரம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments