அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன், மன்னார்குடி யில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
18 எம்.எல் ஏக்கள் நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பை யொட்டியே வந்திருக்கிறது.
சபாநாய கருடைய செயல்பாட்டில் நீதிமன்றம் தலையிடாது என்பது உண்மை என்றாலும் சபாநாய கருடைய தீர்ப்பு பாரபட்சம் கொண்டதாகும்.
ஓ.பி.எஸ் அணி எம்.எல்.ஏ. க்கள் எதிர்த்து வாக்களித்தும் அவர்கள் பணியில் தொடர்கிறார்கள்.
ஆனால் முதல்வரை மாற்ற வேண்டுமென கேட்டதால் 18 எம்.எல்.ஏ. க்களும் நீக்கப்பட்டது பாரபட்சமான தீர்ப்பு என்பது என் கருத்தாகும்.
மேலும் இதை பேசி தீர்வு கண்டிருந்தால் ஜெயலலிதா வின் உழைப்பால் வெற்றி பெற்ற 18 தொகுதிகளை அ.தி.மு.க இழந்திருக்காது.
இந்த தீர்ப்பால் இழப்பு அ.தி.மு.க. வுக்கு தான். 18 எம்.எல்.ஏ. க்கள் நீக்கம் செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பு அ.தி.மு.க. அரசுக்கு ஊதப்பட்ட சங்கு.
மீண்டும் தேர்தல் வந்தாலும் இழந்த தொகுதிகளில் வெற்றி பெறுவது கடினம். அது எதிர் கட்சிகளுக்கே சாதகமாய் அமையும்
சொந்த காரணங்களுக்காக, ஆசைகளுக்காக பொதுச்செயலாளர் சசிகலாவை சிறைக்கு அனுப்பி விட்டு தான்
எல்லாம் என்ற மாயையை தோற்றுவித்து 18 எம்.எல்.ஏ க்களையும் ஏமாற்றி பலிகடா வாக்கியவர் தினகரன் தான்.
தற்போது தினகரன் மேல்முறையீடு செய்வதால் பலன் ஒன்று மில்லை. ஏற்கனவே 18 தொகுதி களிலும் மக்கள் பணி நடைபெற வில்லை.
மேலும் தாமதப் படுத்துவது நல்லதல்ல. உடனே தேர்தலை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Thanks for Your Comments