தென்மேற்கு வங்க கடல், தமிழகம், கர்நாடகாவின் ஒரு சில பகுதிகள் மற்றும் தெற்கு மத்திய மகாராஷ்டிரா வரை வளி மண்டலத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று மாலை 5.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக உதகை மாவட்டம் குன்னூரில் 41.6 மி.மீ.,
கோவை விமான நிலையம் -30, தூத்துக்குடி -22.1, சென்னை விமான நிலையம்-13.4, பாளையங் கோட்டையில் 12.4 மி.மீ., மழை பதிவாகி யுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அதிகபட்ச வெயில் 97.5 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.
இந்நிலையில் தமிழகம், புதுச்சேரிக் கான வானிலை முன்னறிவிப்பில் காற்றழுத்த தாழ்வு நிலையால்,
உள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில், ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யவும் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
Thanks for Your Comments