பாகிஸ்தான் கராச்சி நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முகமது ரஷீத். வாடகை ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இவரது வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு, பின்னர் அது வெளிநாட்டிற்கு மாற்றப் பட்டுள்ளது.
இது தொடர்பாக அவரிடம் பாகிஸ்தான் மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஒரு ஆண்டில் 300 ரூபாய் சேமிப்பது என்பதே பெரிய விஷயம் என தெரிவித்துள்ள முகமது ரஷீத்,
தன்னிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதை நினைத்தால் தற்போதும் நடுக்கமாக இருப்பதாக குறிப்பிட் டுள்ளார்.
அதிகாரிகள் முதலில் விசாரணைக்கு அழைத்த போது பயந்து ஒளிந்து கொண்டதாக வும்,
பின்னர் தனது நண்பர்கள், உறவினர்கள் ஆலோசனை யின் பேரில் விசாரணைக்கு ஒத்துழைத்த தாகவும் முகமது ரஷீத் தெரிவித் துள்ளார்.
இது போன்ற ஏழைகளின் வங்கிக் கணக்கின் மூலம் கோடிக் கணக்கான ரூபாய் பணம் வெளி நாடுகளுக்கு மாற்றப் பட்டுள்ளதாக வும்,
இவை அனைத்தும் சட்ட விரோதமாக ஈட்டப் பட்டவை என்றும் அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
மோசடியாக ஈட்டப்பட்ட பணத்தை மீட்கவும், முறைகேட்டில் ஈடு பட்டவர்களை தண்டிக்கவும்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முயன்று வரும் நிலையில் இத்தகைய நிகழ்வுகள் அதிகரித்துள்ள தாக கூறப்படுகிறது.
Thanks for Your Comments