மார்த்தாண்டத்தில் நிலவிவரும் கடும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில், ரூ.142 கோடியில் மேம்பாலம் அமைகிறது.
தென்னிந்தி யாவிலேயே மிகவும் நீளமான, தமிழகத்திலேயே மிகவும் பெரிய இரும்பு பாலமாக இது அமைகிறது.
குழித்துறை தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் இருந்து மார்த்தாண்டம் பம்மம் வரை சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு
இந்த மேம்பாலம் முற்றிலும் புதிய தொழில் நுட்பத்துடன் அமைந்து வருகிறது.
மேம்பாலத்திற் காக அமைக்கப்படும் 110 ஸ்டீல் பில்லர்களும் சுமார் 2.5 முதல் 8.5 மீட்டர் உயரம் உடையவை. 2 பில்லர் களுக்கு இடையேயான தூரம் 24 மீட்டர்கள்.
சில இடங்களில் இது சற்று வேறுபடும். பில்லர்களின் மேல் அமையும் பீம்கள் 8.5 மீட்டர் நீளம் கொண்டவை.
பாலத்தின் மேல் 12 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கப் பட்டுள்ளது.
இதற்காக பீம்களின் மேல் 22 மி.மீ. தடிமனுள்ள இரும்பு தகடுகள் பொருத்தப் பட்டுள்ளன.
அவற்றின் மேல் 0.75 அடி உயரத்தில் கான்கிரீட் போடப் பட்டுள்ளது. இந்த பாலம் 103 தளங்களை கொண்டுள்ளன.
இவற்றில் வெட்டுவெந்நி பாலத்தில் இருந்தும், பம்மத்தில் இருந்தும் தளங்கள் அமைத்துள்ளனர்.
சந்திப்பை ஒட்டி நெடுஞ்சாலையில் சில தளங்கள் இனி அமைக்க வேண்டும்.
தளங்கள் அமைக்கப்பட்ட இடங்களில் தார் போடப் பட்டுள்ளது.
இதற்காக காங்கிரீட்டில் தண்ணீர் புகாதவாறு அதன் மேல் வாட்டர் புரூப் ஷீட்கள் ஒட்டப் பட்டன.
இந்த ஷீட்களின்மேல் தார் போட்டு கருந்தளம் அமைக்கப் பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு ஐஐடி நிபுணர்கள் முன்னிலை யில், பொறி யாளர்கள்
400 டன் எடையுள்ள காங்கிரீட் கட்டைகளை ஜேசிபி மூலம் அடுக்கி வைத்து பாலத்தின் உறுதித் தன்மையை சோதித்தனர்.
இதில் சோதனை வெற்றிகரமாக முடிந்ததா கவும், பாலம் மிகவும் உறுதித் தன்மையுடன் உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
Thanks for Your Comments