ஏடிஎம்-ல் 5000 எடுக்க சென்றவருக்கு 25 ஆயிரமாக கிடைத்த அதிசியம் !

0
கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில், ஆர்டி நகரில் வசித்து வருபவர் சந்திரகலா. 
இவர் ஒரு பள்ளி ஆசிரியர். அந்த பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் இவர் கணக்கு வைத்துள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஏ.டி.எம்முக்கு சென்ற சந்திரலேகா தனது வாங்கி கணக்கின் ஏடிஎம் ஆட்டை கொண்டு ரூ.5000 பணம் எடுக்க முயற்சித் துள்ளார். 

அப்போது, பணம் வெளியில் வருவதற்கான சத்தமும் வந்துள்ளது. ஆனால் பணம் மட்டும் இயந்திரத்தில் இருந்து வரவில்லை.


இதனால், தான் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு நேராக சென்று நடந்த விபரத்தை தெரிவித்துள்ளார். 

அதற்க்கு வாங்கி அதிகாரி இன்னும் இரு தினங்களில் பணம் உங்கள் கணக்கில் மறுபடியும் செலுத்தப்படும் என்று தெரிவித் துள்ளனர்.

ஆனால், 45 நாட்கள் கடந்து அவரது கணக்கில் பணம் வரவில்லை. 

இதனை யடுத்து, அம்மாவட்டத்தில் உள்ள வங்கி மேலாளரை சந்தித்து முறை யிட்டுள்ளார். 
4 மாதம் கடந்த நிலையில் கடுப்பான ஆசிரியை சந்திரலேகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பின், பெங்களூருவில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், ஏ.டி.எம் உள்ள சிசிடிவி காட்சிகளை சந்திரலேகா சமபித்தார். 

அந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த நீதிபதி அவர் பணம் எடுக்க வில்லை என்பது தெளிவாக பதிவாகி இருந்தது.


இதனை யடுத்து, சம்பந்தப்பட்ட அந்த வங்கியை கடுமையாக எச்சரித்த நீதிபதிகள், இழப்பீடாக ஆசிரியருக்கு ரூ.25,000 வழங்க வேண்டும் என்றும், 

மூன்று வருடங்கள் 11 மாதங்கள் நடைபெற்ற இந்த வழக்கின் செலவாக ரூ.10,000 வழங்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings