ஏமனில் கொடிய பஞ்சம் - 80 லட்சம் பேர் உயிருக்கு போராட்டம் !

0
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமனில் உள்நாட்டுப் போர் காரணமாக வரலாறு காணாத பஞ்சம் தலை விரித்தாடுகிறது. 
இதனால் 80 லட்சம் பேர் உணவு கிடைக்காமல் உயிருக்கு போராடி வருகின்றனர். 

ஏமனில் நிலவி வரும் வேலை வாய்ப்பின்மை, பொருளாதார தடைகள், உள்நாட்டு உற்பத்தி பாதிப்பு ஆகியவை இந்த பஞ்சத்திற்கு காரணமாக கூறப்படு கிறது. 

கடந்த ஓரிரு ஆண்டுகளாக அங்கு உள்நாட்டு போரும் தீவிரம் அடைந்து வருவதால் ஏராளமானோர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். 


உணவு பஞ்சத்தால் சுமார் 80 லட்சம் பேர் உயிருக்கு போராடி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான வர்கள் குழந்தைகள் ஆவர்.

ஏமனில் உள்ள மருத்துவ மனைகளில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக நோய் வாய்பட்ட குழந்தைகளை மட்டுமே பார்க்க முடிகிறது. 

உணவு பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் பெரும் வேதனைக்கு ஆளாகி வருகின்றனர். 

ஏமனில் ஆடன் நகரில் உள்ள அல்சபாகா என்ற முக்கிய மருத்துவ மனையில் ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 

மக்கள் சேமிப்பு முழுவதையும் சிகிச்சைக் காக செலவிட்டு வருவதால் தற்போதைய பஞ்சம் மிகக்கொடிய பஞ்சமாக மாறும் என அஞ்சப்படு கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings