மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் நகரில் ஹட்கோ பகுதியில் வசித்து வருபவர் கஜானன் காரத்.
கடந்த 9ந்தேதி ஆன்லைன் மூலம் மொபைல் போன் ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார். ரூ.9,134 பணமும் இதற்காக செலுத்தி யுள்ளார்.
அதன்பின் ஒரு வாரத்திற்குள் போன் கிடைத்து விடும் என்று வர்த்தக நிறுவன த்திடம் இருந்து அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், கஜானனுக்கு ஒரு பார்சல் வந்திருக்கிறது. அதனை அவர் பிரித்துப் பார்த்திருக்கிறார்.
அதில் தோலை பேசிக்கு பதிலாக செங்கற்கட்டி ஒன்று இருந்திருக்கிறது.
இதனால் அதிர்ச்சி யடைந்த கஜானன் கூரியர் கொண்டு வந்த நபரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால் பார்சலை கொண்டு வருவது என்பதே தனது வேலை என்றும் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவித் திருக்கிறார்.
இது குறித்து ஹர்சூல் காவல் நிலையத்தில் கஜானன் காவல் துறையினரிடம் புகார் கொடுத்தார்.
இதனை தொடர்ந்து மோசடி வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Thanks for Your Comments