எச்.ஐ.வி சோதனை செய்யாமல், குளுக்கோஸ் தண்ணீரைக் கலந்து கலப்பட ரத்தத்தை முறைகேடாக விற்பனை செய்து
வந்த மோசடிக் கும்பலை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த லேப் டெக்னீசியன்கள் முகமது நசீம் மற்றும் ராகவேந்திர சிங்.
கடந்த ஆறு மாதங்களாக இவர்கள் போலியான ரத்த வங்கி ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.
அவசரத் தேவைக்காக பணம் கேட்டு வரும் ஏழைகள் மற்றும் போதைக்கு அடிமை யானவர்களிடம் ரூ. 500 பணம் கொடுத்து ஒரு யூனிட் ரத்தத்தை எடுத்துள்ளனர்.
பின்னர் அந்த ரத்தத்துடன் குளுக்கோஸ் தண்ணீரைக் கலந்து இரண்டு யூனிட்டாக்கி அதனை மருத்துவ மனைகளுக்கு விற்பனை செய்துள்ளனர்.
ஒரு யூனிட் ரத்தத்தை அவர்கள் ரூ. 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை விற்பனை செய்து வந்துள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களாக இந்த மோசடியை அவர்கள் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் இவர்களிடம் வாங்கிய ரத்தம் வித்தியாச மாக இருப்பதாக ஒரு மருத்துவமனை நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆய்வகத்தில் அந்த ரத்தத்தை ஆய்வு செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இந்த கலப்பட ரத்தம் விற்பனை விவகாரம் தொடர்பாக போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனை யடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையி ல், கலப்பட கும்பலுக்கு
மூளையாக செயல்பட்ட முகமது நசீம் உட்பட கும்பலில் இருந்த அனைவரும் கைது செய்யப் பட்டனர்.
இவ்வாறு விற்கப்பட்ட ரத்தம் எச்.ஐ.வி உள்ளிட்ட எந்த மருத்துவ பரிசோதனை யும் செய்யாமல் விற்பனை செய்யப் பட்டுள்ளது.
மேலும், 'அரசு அங்கீகாரம், முத்திரை உள்ளிட்ட அனைத்தையும் போலியாக தயார் செய்து,
அசல் ரத்த வங்கி உறையை போன்றே தயார் செய்து ரத்தம் விற்பனை செய்யும் போது பயன்படுத்தி யுள்ளனர்.
அனைத்தும் கச்சிதமாக இருந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரு க்கு இந்தக் கலப்பட ரத்தம் ஏற்றப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’ என அம்மாநில போலீசார் தெரிவித் துள்ளனர்.
இந்த கலப்பட ரத்தம் மோசடி உத்தரப் பிரதேசத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
கடந்த ஆறு மாதத்தில் மருத்துவ தேவைக்காக ரத்தம் ஏற்றிக் கொண்ட பலரும்,
தங்களுக்கும் கலப்பட ரத்தம் ஏற்றப் பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர்.
Thanks for Your Comments