விமானம் மோதி விபத்து, செல்பி எடுக்க மக்கள் ஓட்டம் !

0
செல்பியால் உயிரிழப்பு வரையில் எத்தனையோ ஆபத்துக்குள் இருந்தும் அதன் மீதான நாட்டம் இளைஞர்கள் மத்தியில் குறைந்தப் பாடில்லை.
விமானம் மோதி விபத்து, செல்பி எடுக்க மக்கள் ஓட்டம் !
உயிரிழந் தோருடனும், விபத்தில் சிக்கியவர்களுடனும், துரதிஷ்டவசமான சம்பவங்களில் பாதிக்கப் பட்டவர்களுடனும் செல்பி எடுக்கும் கொடூரமான போக்கும் நிலவி வருகிறது. 

இது போன்ற சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் இப்போது அரங்கேறி யுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் காசியா பாத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் ஒன்று வழக்கமான சோதனை பணிக்காக புறப்பட்டு சென்றது. 

அப்போது விவசாய நிலம் ஒன்றில் மோதி விபத்துக்குள் சிக்கியது. விமானத்தில் இருந்த மூன்று பேரும் பத்திரமாக உயிர் தப்பினர். 

விமானம் விபத்துக் குள்ளானது குறித்து தகவல்கள் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் விரைந்து சென்று செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டி யுள்ளனர். விபத்தில் சிக்கியுள்ள விமானம் என்ன நிலையில் உள்ளது. 

அது வெடித்து சிதறும் அபாயம் உள்ளதா? என்று எதுவும் தெரியாது. அவர்கள் விமானத்துடன் பல கோணங்களில் புகைப் படங்களை எடுத்து தள்ளி, சமூக வலை தளங்களில் வெளியிட் டுள்ளனர்.

விமானம் எதனால் விபத்துக்குள் சிக்கியது என்பது உடனடியாக தெரிய வரவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் ரக விமானங்கள் இது போன்ற விபத்துக்களில் சிக்குவது ஒன்றும் புதியது கிடையாது. 
செப்டம்பர் 4-ம் தேதி விமானப் படைக்கு சொந்தமான மிக் -27 ரக விமானம் ராஜஸ்தான் மாநிலம் தேவ்லியா கிராமத்தில் விழுந்து விபத்துக்குள் சிக்கியது. விமானி காயமின்றி பத்திரமாக உயிர்தப்பினார். 

ஜூன் மாதம் இமாச்சல பிரதேசம் மாநிலம் காங்ராவில் மிக்-21 ரக விமானம் விபத்துக்குள் சிக்கியது. அப்போது துரதிஷ்ட வசமாக விமானி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings