வேலூர் மாவட்டத்தில், கடந்த, சில ஆண்டுகளாக கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆட்கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.
சிறையில் அடைத்தாலும், சில நாளில் ஜாமினில் வெளியே வரும் குற்றவாளிகள், மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என, போலீசார் புலம்புகின்றனர்.
ரவுடிகள் வசூர் ராஜா, குப்பன், ஜானி, வீச்சு தினேஷ் ஆகியோர் தலா, 25க்கும் மேற்பட்ட அடியாட்களைக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதில், ரவுடி குப்பன், சேலம் சிறையிலும், வசூர் ராஜா, திருச்சி சிறையிலும் உள்ளனர். வீச்சு தினேஷ், கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தான்.
ரவுடி ஜானியை, காவல் துறையினர் பிடிக்க முடியாமல் திணறுகின்றனர்.
இது குறித்து, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ரவுடிகள் பலர் சிறையில் இருந்தாலும், தலை மறைவாக இருந்தாலும், தங்கள் அடியாட்களுக்கு, ‘ஆன்லைன்’ மூலம் திட்டம் தீட்டிக் கொடுக் கின்றனர்.
அதற்காக அவர்கள் நவீன வசதி கொண்ட மொபைல் போன்களை பயன்படுத்து கின்றனர்.
உத்தரவுக்கு ஏற்ப, வெளியில் உள்ள அடியாட்கள் போட்டு கொடுக்கும் திட்டத்தை, கச்சிதமாக செயல் படுத்துகின்றனர்.
தற்போது, மணல் கடத்தல், வியாபாரிகள், தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதனால், வேலூர் மாவட்டம், கொலை, கொள்ளை, வழிப்பறிக் களமாக மாறியுள்ளது.
இதைத் தடுக்க, காவல்துறையை இன்னும் மேம்படுத்தி, நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்த, காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
Thanks for Your Comments