ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு இன்றும் நாளையும் அரசு விடுமுறை நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்நிலையில், தொடக்க பள்ளிகளை மட்டும் நாளை திறக்க பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ள செய்தியில்,
அரசு, மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
நாளை பள்ளிகளை திறந்து தொடக்க கல்வி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
இந்நிலையில், கல்வி செல்வதை அள்ளத் தரும் சரஸ்வதிக்கு உகந்த நாளான நாளை பள்ளியில் சேர்ந்தால்
குழந்தையின் கல்வி சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் பள்ளிக் கல்வித்துறை இந்த ஏற்பட்டினை செய்துள்ளது.
Thanks for Your Comments