ஆசியா விலேயே முதன் முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது.
தற்போதைய வாழ்கை முறையில் குழந்தை யின்மை பிரச்னை அதிகப் படியான மக்களுக்கு உள்ளது.
இந்த நிலையில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த மீனாட்சி என்ற இளம் பெண் திருமணமாகி
அதிக வருடங்களாகக் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளார்.
இவருக்கு மூன்று முறை கருச்சிதைவும், மேலும் ஒரு முறை குழந்தை இறந்தும் பிறந்துள்ளது.
இனி மேல் மீனாட்சிக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனை யடுத்து, மீனாட்சியின் தாய் அவருக்குக் கருப்பையைத் தானமாக வழங்கி யுள்ளார்.
கடந்த வருடம் மீனாட்சிக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
மீனாட்சி உடல்நிலை சற்று தேறிய பிறகு இந்த வருடம் ஏப்ரல் மாதம் இவருக்கு கருத்தரிப்பு சிகிச்சை செய்யப் பட்டது.
இந்த நிலையில், நேற்று புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் மீனாட்சிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனால் மீனாட்சியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.
Thanks for Your Comments