நீதிமன்ற தீர்ப்பை காட்டி திருமணமான ஒரே மாதத்தில் காதலனுடன் சென்ற பெண் !

0
சேலம் அடுத்த ஓமலூர் அருகே திருமணமான ஒரே மாதத்தில் கணவர் கட்டிய தாலியை கழற்றி விட்டு காதலனுடன் சென்ற இளம் பெண்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தாராபுரத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் மற்றும் 


அந்த பெண்ணின் வீட்டின் அருகே வசித்து வரும் சிவக்குமார் ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். 

மேலும் அந்த பெண்ணுக்கு பழனிசாமி என்பவருடன் செப்டம்பர் மாதம் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், அந்த பெண் நேற்று இரவு வீட்டின் குளியல் அறையில் தாலியை 

கழற்றி வைத்து விட்டு தன்னுடைய காதலுடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதை தொடர்ந்து, அந்த பெண்ணும், அவளது காதலனும் சேலம் சரக டிஐஜி அலுவலகத்தை நாடினர். 

இங்கிருந்த காவல் துறையினர் ஓமலூர் காவல் நிலையத்திற்கு அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தனர்.

இதை யடுத்து, அந்த பெண்ணின் கணவர் பழனிச்சாமி மற்றும் காதலர் சிவகுமார் முன்பு காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். 


அப்போது தன்னை தனது காதலனுடன் அனுப்பி வைக்கா விட்டால் உச்ச நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் என 

அந்த பெண் கூறியதால் பெண்ணின் விருப்படி அவரை அவரது காதலனுடன் போலீசார் சேர்த்து வைத்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings