போக்குவரத்து அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் ஓட்டுநர் உரிமம் !

0
காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார் வெளி யிட்டுள்ள அறிக்கை: 
வட்டார போக்குவரத்து அலுவல கங்களில் கடந்த 2012ம் ஆண்டு முதல் வாகனங் களுக்கான 

பதிவு கட்டணம் மற்றும் வரி ஆகிய வற்றை இணையதளம் மூலம் செலுத்தும் வசதி நடைமுறையில் உள்ளது. 

இதன் தொடர்ச்சியாக வாகனம் சம்மந்தப்பட்ட பெயர் மாற்றம் செய்தல், உரிமம் மாற்றம் செய்தல், தவணை கொள்முதல் மற்றும் தவணை ரத்து செய்தல் 

போன்ற அனைத்து பணிகளுக்கும் இணையதளம் மூலம் மனு செய்யும் வசதி செய்யப்பட்டு அதற்கான கட்டணம் கணினி வழியாக செலுத்தும் வசதி செய்யப் பட்டுள்ளது.

கடந்த 2017 முதல் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலக ங்களில் 

ஓட்டுநர் உரிமம் சம்மந்தப்பட்ட அனைத்து பணிகளும் இணைய தளம் மூலம் வழங்கப் படுகின்றன. 

இனிமேல் பழகுநர் உரிமம், நிரந்தர ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் முகவரி மாற்றம் செய்தல், 

நகல் ஓட்டுநர் உரிமம் பெறுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும். 

இதன்படி http://parivahan.gov.in/parivahan என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். 

ஆன் லைனில் மனுவை பூர்த்தி செய்தபிறகு அதற்கான கட்டண த்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

வங்கி இணைய சேவை, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலமாக விண்ணப் பத்திற்கு செலுத்த வேண்டிய 


தொகையை இணைய தளம் மூலம் ரசீது உருவாக்கி அதை அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தலாம். 

செலுத்திய பின்பு ஒப்புகை சீட்டு அல்லது பணம் கட்டிய ரசீதுடன் வட்டார போக்குவரத்து அலுவலகம் 

மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவல கத்துக்கு சென்று தகுந்த டெஸ்டில் கலந்து கொண்டு புகைப்படம் எடுத்து உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம். 

இது போன்று வட்டார போக்குவரத்து அலுவலக பணிகள் அனைத்தும் படிப்படியாக ரொக்கமில்லா பரிவர்த்தனை யாக மாற்ற திட்ட மிடப்பட் டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings