காந்தி ஜெயந்தியை யொட்டி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இன்று அதிசய சூரிய ஒளி விழுகிறது.
மகாத்மா காந்தியின் அஸ்தி 1948ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி கன்னியாகுமரி கடலில் கரைப்பதற்கு
முன்பு பொது மக்கள் அஞ்சலி செலுத்து வதற்காக கடற்கரையில் வைக்கப் பட்டிருந்தது.
அந்த இடத்தில் நினைவு மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டு கடந்த 1954ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1956ம் ஆண்டு திறக்கப்பட்டது.
சுமார் அரை ஏக்கர் நிலபரப்பில் 79 அடி உயரத்தில் அகிம்சை, சமாதானம், வாய்மை என்ற தத்துவத்தின் அடிப்படையில் கட்டப் பட்டுள்ள
இந்த மண்டபத்தின் உள்பக்கம் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் அரிய புகைப் படங்கள் வைக்கப் பட்டுள்ளன.
ஆண்டு தோறும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி காந்தி மண்டபத்தில்
அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் சூரிய ஒளி விழுவதை காண ஆயிரக்கண க்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
அதன்படி இன்று பகல் 12 மணிக்கு அஸ்தி கட்டத்தில் அதிசய சூரிய ஒளி விழும் என எதிர் பார்க்கப் படுகிறது.
இதை நேரில் பார்க்க கன்னியாகுரிமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
இன்று காலை 9 மணிமுதல் நுற்புவேள்வி, தேசபக்தி பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை வகிக்கிறார். அதிகாரிகள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
Thanks for Your Comments