பேருந்து கட்டணமா? விமான கட்டணமா? அதிர்ந்த பயணிகள் - டிக்கெட் விலை !

0
ஆயுத பூஜை, விஜய தசமியை முன்னிட்டு 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால் தனியார் ஆம்னி பேருந்துகள் தங்களது கட்டணத்தை உயர்த்தி யுள்ளன.
இன்று ஆயுத பூஜை, நாளை விஜயதசமியை தொடர்ந்து சனி, ஞாயிறு 4 நாட்கள் விடுமுறை என்பதால் 


சென்னை யிலுருந்து மக்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 

இதற்கான முன்பதிவு பெரும் பாலான மக்கள் செய்திருந்த போதிலும், கடைசி நேரத்தில் கிடைக்காத மக்களும் நேற்று மாலை புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில் 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால் தமிழக அரசு சார்பில் 
வழக்கமாக இயங்கும் 2775 பேருந்து களுடன் கூடுதலாக 700 பேருந்துகள் இயக்கப் பட்டன. 

இதில் பெரும்பாலும் இணையத்தில் பதிவு செய்யப் பட்டவை என்பதால் நேற்று வெளியூர் செல்வோர் களுக்கு பஸ் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. 

இதனை பயன்படுத்தி கொண்ட தனியார் ஆம்னி பேருந்துகள் தங்களது கட்டணத்தை விமான கட்டணம் போல் உயர்த்திக் கொண்டது. 

வழக்கமாக சென்னை யிலுருந்து மதுரை மற்றும் கோயம்புத்துர்க்கு ரூ.700 , ரூ.900 கட்டணம் வசூலிக்கப்படும். 

நேற்றைய தினம் ரூ.1500 மற்றும் ரூ.2200 வரை வசூலிக்கப் பட்டது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.

இதே போல் வரும் ஞாயிற்று கிழமை மதுரையில் இருந்து சென்னைக்கு வரும் 

தனியார் பேருந்துகளின் கட்டணம் ரூ.1800 முதல் ரூ.2200 வரை ஏற்கனவே உயர்த்தப் பட்டுள்ளது. 

இது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தி யுள்ளது.


பண்டிகை காலங்களில் பஸ் கட்டணத்தை உயர்த்தும் தனியார் பேருந்துகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று 

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். 

இதனை பொருட் படுத்தாமல் தனியார் பேருந்துகள் தங்களது கட்டணத்தை உயர்த்துவ தால், 

முறையான சட்டம் பிறப்பிக்கப்படவேண்டும் என்று மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings