கதவை திறந்து வைத்து உறங்கிய போது பச்சிளம் குழந்தையை கடத்தல் !

1 minute read
0
சென்னை வேளச்சேரி யில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து உறங்கிய போது, பிறந்து ஒரு மாதமே ஆன 
பச்சிளம் குழந்தையை வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் கடத்தியதாக புகார் எழுந்துள்ளது. 


சென்னை வேளச்சேரி ஏரிக்கரை அருகில் குடியிருப்பு ஒன்றின் தரைத் தளத்தில் 

வசிக்கும் வெங்கண்ணா -உமா தம்பதிக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. 

அந்த குழந்தை யுடன், வீட்டிற்குள் நேற்றிரவு உறங்கிய தம்பதி, காற்றுக் காக கதவைத் திறந்து வைத்துள்ளனர்.

அதிகாலை 5 மணியளவில் குழந்தையைக் காணாததைக் கண்டு அதிர்ச்சி யடைந்த பெற்றோர், 

வேளச்சேரி காவல் நிலையத்து க்கு தகவல் தெரிவித்தனர். 


அதிகாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, பெண் ஒருவர் குழந்தையை 

மார்பில் அணைத்த படி தட்டி கொடுத்து கொண்டே சென்றதை கண்டுள்ளனர். 

எனவே அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 13, March 2025
Privacy and cookie settings