தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்ட மன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளி லும் தனித்து நின்று போட்டி யிட்டது.
232 தொகுதிகளில் முரசு சின்னத்தி லும் மீதம் உள்ள 2 தொகுதிகளில் (மோதிரம் சின்னத்திலும் போட்டி யிட்டது.
இந்த தேர்தலில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றார்,
இருப்பினும் அக்கட்சிக்கு குறிப்பிடத்தக்க தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்று தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.
அதே போல் 2009 பொதுத் தேர்தலில் இக்கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தமிழகத்தின் 39 & புதுச்சேரியில் தனியாக போட்டி யிட்டது.
இந்த தேர்தலில் தேமுதிகவுக்கு என்று முரசு சின்னத்தை ஒதுக்குமாறு உயர் நீதிமன்ற இடைக்கால தீர்ப்பு வழங்கியது.
பின் அதுவே கட்சியின் சின்னமாகவும் அங்கீகரிக்கப் பட்டது.
அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வுடன் தேமுதிக கூட்டணி அமைத்து 29 தொகுதிகளில் வெற்றி பெற்று சட்ட மன்றத்தின் எதிர்க் கட்சியாக உருவெடுத்தது.
கட்சி சார்பாக ஒவ்வொரு வருடமும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார்.
மேலும் தனது முதல் அரசியல் மேடை பேச்சையும் நிகழ்த்தினார்.
இந்நிலையில், சற்றுமுன் (19.10.2018) தேமுதிகவின் பொது ச்செயலாளர் விஜயகாந்த் தலைமை யில் நடைபெற்ற
உயர்மட்ட குழு கூட்டத்தில், தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் ஒருமனதாக தேர்வு செய்யப் பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி யுள்ளது.
Thanks for Your Comments