இந்தோனேசியா வில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்க த்துக்கு 1000க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில்,
தொடர்ந்து அப்பகுதியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டிருப்பது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சுனாமியின் தாக்கத்தில் இருந்து மக்கள் மீள்வதற்குள், சுலவேசி தீவில் உள்ள
ஒரு எரிமலை நேற்று காலை வெடித்து சிதறி கடும் சீற்றத்துடன் சாம்பலைக் கக்கத் தொடங்கி உள்ளது.
எரிமலையில் இருந்து வெளிவரும் புகையானது வானில் 6000 மீட்டர் உயரத்திற்கு பரவி உள்ளது.
எரிமலை அருகில் பொது மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், சாம்பல் தாக்கத்தில்
இருந்து தப்பிக்க முகமூடிகள் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
எனினும் எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களை வெளியேற்றுவது தொடர்பான உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்பட வில்லை.
Thanks for Your Comments