கிரிமியா நாட்டில் கல்லூரி ஒன்றில் மாணவன் ஒருவன் துப்பாக்கியால் சக மாணவர்களை
கொடூரமாக சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரிமியாவில் விலடிஸ்லாவ் ரோசலியாகோவ் என்ற 18 வயது நிறைந்த மாணவர்,
கல்லூரியில் தன்னுடன் படிக்கும் சகமாணவர் களை துப்பாக்கியால் பயங்கரமாக சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.
பின்னர் கல்லூரி உணவு விடுதியிலேயே தானும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.
கொடூர சம்பவத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ள தாகவும், 68 பேர் படுகாயங் களுடன்
மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி யுள்ளது.
மேலும் 5 பேர் கோமா நிலையில் இருப்ப தாகவும், அவர்கள் நிலை மிகவும் கவலைக் கிடமாக உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த கொடூர தாக்குதலுக் கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இது குறித்து மாணவர்கள் கூறுகையில், அவன் முன்னாள் காதலியை சந்திக்க சென்றிருந்தான்,
அந்த பெண் மீது உள்ள ஆத்திரத்தில் இவ்வாறு செய்திருக்க லாம் எனவும், மற்றொரு மாணவன் அவன் கம்ப்யூட்டர் விளை யாட்டுகளுக்கு அடிமையாகி இருந்தான்,
எப்பொழுது ஆர்வமாக விளையாடிக் கொண்டே இருப்பான், அந்த தாக்கத்தில் இப்படி செய்திருக்கலாம் எனவும் கூறி யுள்ளார்கள் .
இந்த சம்பவம் உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
Thanks for Your Comments