இந்தியா என்றால் ஆஃப்கானிஸ்தானி யர்களுக்கு மிகவும் விருப்பம் என மலாலா பிரெஸ்னா முசஸாய் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு, போலியா நோயால் பாதிகப்பட்டு மாணவி பிரெஸ்னா முசஸாயின் ஒரு கால் செயலிழந்தது.
இதனை யடுத்து தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டால் முசஸாயின் மற்றொரு கால் செயல் இழந்தது.
இந்நிலையில் வேறு வழியின்றி முசஸாய் தனது படிப்பைக் கை விட்டார். மேலும் படுத்த படுக்கையானார்.
இதற்கிடையே குடும்பத்தினரின் உத்வேகத்தால் தற்போது முசஸாய் கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
இந்நிலையில் செய்தி யாளர்களிடம் பேட்டியளித்த பிரெஸ்னா முசஸாய், இந்தியாவின் நட்பு கிடைத்தது ஆஃப்கானிஸ்தானின் அதிர்ஷ்டம் என்றும்,
கல்வி உதவித் தொகை, முதலீடுகள் உள்ளிட்ட வற்றின் மூலம் தங்களுக்கு இந்தியா உதவி வருவதாகவும் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் மலாலா யூசுஃப்சாயைப் போல் பிரெஸ்னா முசஸாய் பார்க்கப் படுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments