தென்மேற்கு பருவ மழை காலம் முடிந்து விட்ட நிலையில், விரைவில் வட கிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது.
இதற்கிடையே, இலங்கை அருகே வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி
காரணமாக தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் மழை குறித்த முன்னெச்சரி க்கையை தெரிவிக்கும் வகையில் தமிழகத்துக்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்து உள்ளது.
இந்தநிலையில், தலைமை செயலாளர், பேரிடர் மேலாண்மைத் துறை, பொதுப்பணித் துறை தலை பொறி யாளருக்கு மத்திய நீர்வள ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.
அதில், தமிழகத்தில் பொன்ணையாறு, பாலாறு, வெள்ளாறு, கொசஸ்தலை ஆற்றில் நீர் இருப்பை கண்காணிக்க வேண்டும்.
5 நாட்கள் கன மழையும், 7-ம் தேதி மிக கன மழையும் பெய்யும் என்பதால் நீர்நிலை களை கண்காணிக்க வேண்டும்.
5 நாட்கள் கன மழையும், 7-ம் தேதி மிக கன மழையும் பெய்யும் என்பதால் நீர்நிலை களை கண்காணிக்க வேண்டும்.
தமிழகத்தில் அணைகளில் நீர்மட்டம், நீர் வரத்தை 24 மணி நேரமும் கண்கானிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
Thanks for Your Comments