நாட்டிலேயே முதல் முறையாக, உத்தர பிரதேச மாநிலத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட 1,000 சட்டங்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
உ.பி.,யில் பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார்.
தற்போதைய சூழ்நிலைக்கு பொருந்தாத, 1,000 சட்டங்களை, உ.பி., அரசு பட்டியலிட்டு உள்ளது.
இந்த சட்டங்கள் அனைத்தையும், ஒரே சட்ட திருத்த மசோதா மூலம், ரத்து செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது.
இது குறித்து, உ.பி., மாநில சட்ட அமைச்சர், பிரிஜேஷ் பதக், நிருபர்களிடம் கூறியதாவது:
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட பல சட்டங்கள் தற்போதைய காலத்துக்கு பொருந்தா தவையாக மாறியுள்ளன.
இத்தகைய சட்டங்களை ஆய்வு செய்து வருகிறோம்.
இந்த சட்டங்கள் அனைத்தையும், ஒரே சட்ட திருத்தம் மூலம், ரத்து செய்ய திட்ட மிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். உ.பி., அரசு ரத்து செய்ய வுள்ள சட்டங்களில், 1890ல் உருவான, ஐக்கிய மாகாண சட்டமும் அடங்கும்.
இந்த சட்டத்தை, பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல், மேற்கு மாகாணங்கள் மற்றும் அவுத் பகுதியை சிறப்பாக நிர்வகிப்ப தற்காக கொண்டு வந்தார்.
உ.பி., மாநிலம் உருவாகி, 68 ஆண்டுகள் ஆனதை, அம்மாநில அரசு, சமீபத்தில் கொண்டாடியது.
அதை தொடர்ந்து, பிரிட்டிஷ் ஆட்சி கால சட்டங்களை ரத்து செய்யும் முடிவு எடுக்கப் பட்டது.
நாட்டில், பிரிட்டிஷ் ஆட்சி கால சட்டங்கள், இவ்வளவு அதிகமாக ஒரே நேரத்தில் ரத்து செய்யப் படுவது, இதுவே முதல் முறை.
Thanks for Your Comments