சென்னை வேளச்சேரி பகுதியில் பெற்ற தாயே தனது ஒரு மாத குழந்தையை கொலை செய்த சம்பவமொன்று பதிவாகி யுள்ளது.
கடந்த மாதம் சென்னை வேளச்சேரியை சேர்ந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை யொன்று பிறந்துள்ளது.
இந்நிலையில், நேற்று தனது குழந்தையை காணவில்லை என குறித்த தம்பதியினர் வேளச்சேரி காவல் துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் காவற் துறையினர் மேற்கொண்ட விசாரணை யில் குறித்த தாயே குழந்தையை கொன்று வீசியுள்ளமை தெரிய வந்துள்ளது.
விசாரணையின் போது குழந்தை காணாமல் போனமை தொடர்பில் குழந்தையின் தாயின் முகத்தில்
எந்த வித சோகமும் இல்லாததால் சந்தேகமுற்ற காவற் துறையினர் அவரிடம் விசாரணை களை மேற்கொண்டனர்.
இதன் போது, நேற்று குழந்தைக்கு பாலூட்டும் போது அவருக்கு வலி ஏற்பட அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல்,
குழந்தையை கொலை செய்ததாக காவல் துறையில் குறித்த பெண் வாக்கு மூலம் வழங்கி யுள்ளார்.
இது, குழந்தையின் தந்தைக்கு காவல்துறை விசாரணையின் போது தான் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சந்தேகநபரான குறித்த பெண் கைது செய்யப் பட்டுள்ள நிலையில்,
குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் வேளச்சேரி காவல் துறையினர் மேலதிக விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.
Thanks for Your Comments