இன்னும் நான்கு வருடங்களுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ககன் யான்
திட்டப் பணிகளை மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருக்கிறார்.
ஜம்முவில் நிருபர்களிடம் பேசிய அவர், விண்வெளி சுற்றுலா என்பது விரைவில் சாத்தியமாகும் என்று நம்பிக்கை தெரிவித் திருக்கிறார்.
இதற்கான வாய்ப்புகளை இஸ்ரோ உருவாக்கி வருவதாக குறிப்பிட்ட அவர், 2022ம் ஆண்டுக்குள் இது சாத்தியமாகும் என்று தெரிவித்தார்.
2022ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு விழா கொண்டாடப்படும் போது,
ககன்யான் திட்டம் செயல் படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித் துள்ளதையும் சிவன் நினைவு கூர்ந்தார்.
Thanks for Your Comments