இன்றைய கால கட்டங்களில் மக்கள் சாலைகளை கடக்கும் போது எதிர்பாராத விபத்துகள் பெரும்பாலும் நடக்கின்றன.
சாலைகளை கடக்க முயற்சிக்கும் போது சமிக்கை விளக்குகள் (சிக்னல்ஸ்) பார்த்து சாலையை கடப்பது வழக்கம்.
சில இடங்களில் கூட்ட நெரிசலால் சில விபத்துகள் ஏற்படுகிறது.
மேலும் சிறு குழந்தைகள் சமிக்கை விளக்குகளின் கீழ் நிற்கும் போது எதிர் பாராத விதமாக சாலைக்கு உள்ளே செல்ல அல்லது தெரியாமல் சாலையை கடக்க வாய்ப்புள்ளது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ஒரு நாட்டில் சமிக்கை அமைப்புகள் மூலம் செயல்படும் எச்சரிக்கை அமைப்புகளை தயார் செய்துள்ளனர்.
அந்த எச்சரிக்கை அமைப்பில் உள்ள தொடுதிறன் உணரியானது சமிக்கை பகுதியில் 1 அடி உயரத்தில் இந்த அமைப்பு செயல்படுகிறது.
அதன் மூலம் யாரேனும் வாகனங்களுக்கான சமிக்கை விளக்கு செயல்பட்டு வாகனங்கள் செல்லும் போது
சாலையை யாரேனும் கடக்க முற்பட்டால் இந்த சமிக்கை அமைப்பின் மூலம் தண்ணீரானது பீச்சி அடிக்கிறது.
இதனால் சாலையை அவசரமாக கடக்க முற்படுபவர் களை குறிப்பாக குழந்தைகளை தடுத்து நிறுத்துவ தால் விபத்துகள் தவிர்க்கப் படுகிறது.
மேலும் செல்போன் பேசிக் கொண்டு மெய் மறந்து செல்பவர் களால் ஏற்படும் விபத்துகள் குறைக்கப்படும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
Thanks for Your Comments