முதியோருக்கு ஏற்படும் சுவாசக் கோளாறு பிரச்னைகளை சீர்செய்ய வைட்டமின் டி உதவுகிறது என்று, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த கொலரோடோ பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் குழு, வயதானவர் களுக்கு ஏற்படும் சுவாசக் கோளாறு மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி ஆய்வு நடத்தி யுள்ளனர்.
அதில், வயது முதிர்ந்த நிலையில் வரும் சுவாசக் கோளாறு காரணமாக, பெரும்பாலான மக்கள் கடுமையாகப் பாதிக்கப் படுகின்றனர்.
இதனால், நிமோனியா, இன்ஃப்ளூயன்சா, நுரையீரல் தொற்று உள்ளிட்ட பல நோய்களும் அவர்களுக்கு எளிதில் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய வைட்டமின் டி பெரிதும் உதவுகிறது.
போதுமான அளவில் வைட்டமின் டி எடுத்துக் கொள்வதால், வைரஸ் தொற்றை சமாளிப்பதோடு, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கச் செய்கிறது.
இதனால், நீண்ட கால சுவாசக் கோளாறு பிரச்னைகளும் சீர் செய்யப் படுகின்றன.
குறிப்பாக, வைரஸ் தொற்றை சரி செய்வதால், சுவாசப் பாதையில் சீரான இயக்கம் நடைபெறுவ தாகவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Thanks for Your Comments