ரயில் விபத்து களைத் தடுக்கவும், பிரயாணிகள் பாதுகாப்பான பயணத்தை மேற் கொள்ளவும்
ஸ்மார்ட் டிரெயின் என்னும் திட்டத்தினை இந்திய ரயில்வே துறை அறிவித் துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ரயில்களில் கறுப்புப் பெட்டி, செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கக் கூடிய
கண்காணிப்பு கேமரா, சென்சார்கள் போன்ற அம்சங்கள் பொருத்தப்பட இருக்கின்றன.
இதே போல் 100 ரயில்களைத் தயாரிக்க இருப்பதாக இந்திய ரயில்வே அறிவித் துள்ளது.
முதல் கறுப்புப் பெட்டி ரயில்
இந்திய ரயில்வே வரலாற்றில் இப்போது தான் முதல் முறை கறுப்புப் பெட்டி ரயில்களில் பொருத்தப்பட இருக்கிறது.
கறுப்புப் பெட்டி யானது ரயிலின் ஒவ்வொரு பெட்டிக ளுடனும் இணைக்கப் பட்டிருக்கும்.
இதனால் பயணி களுக்கான அறிவுரைகள் உடனுக்குடன் வழங்கப் பட்டு விடும்.
ஆபத்துக் காலத்தில் இந்த வசதி பேருதவி புரியும் என அதிகாரிகள் தெரிவிக் கிறார்கள்.
இணையத்தில் இணையும் ரயில்
ரயில் பெட்டிகளில் டிஜிட்டல் போர்டுகள் பொருத்தப்பட இருக்கின்றன.
ரயில் பயணிக்கும் பாதை, ரயிலின் நிறுத்தங்கள், காலநிலை போன்ற வைகளை பயணிகள் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ரயில் பாதைகளை ஆய்வு செய்யவும் தீர்வு காணப் பட்டிருக்கிறது.
கட்டுப் பாட்டு அறையி லிருந்து GPS மூலமாக ரயிலானது கண்காணி க்கப்படும்.
தகவல் பரிமாற்றமும் இதன் மூலமே நடைபெறு கிறது.
PICCU (The Passenger Information And Coach Computing Unit) என்னும் வசதி மூலம் ரயிலில் உள்ள
பயணி களைப் பற்றிய தகவல் களை கண்காணிப்பு அறையில் உள்ள அதிகாரிகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.
கண்காணிப்புக் கேமராக்கள்
ஒரு பெட்டிக்கு 6 வீதம் ரயில் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொறரு த்தப்பட இருப்பதாக ரயில்வே துறை அறிவித்தி ருக்கிறது.
பயணிகளை இதன் மூலம் நேரடியாகக் கண்காணிக் கலாம்.
இதனால் பெண்கள் பாதுகாப்பு, திருட்டு, சுகாதாரம் ஆகிய வற்றிற்கான தீர்வுகளை அடைய முடியும்.
ஆபத்துக் காலத்தில் இயங்கும் Talk – Back வசதியின் மூலம் பயணிகள் தங்களது
சந்தேகங் களை கணினிக் கட்டுப் பாட்டுக் கருவியிடம் கேள்வி யெழுப்பலாம்.
அதற்குரிய பதில்களை கருவி அளிக்கும். இது மட்டு மல்லாமல் WiFi வசதி பயணி களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
மேலும் ரயிலில் தண்ணீர் இல்லாமல் போகும்போது குறுஞ்செய்தி மூலம் மக்கள் அதனைத் தெரிவிக்க லாம்.
இதற்கான எண் ரயில் பெட்டிகளில் கொடுக்கப் பட்டிருக்கும். ரயிலின் அடுத்த நிறுத்தத் தின் போது தண்ணீர் நிரப்ப ப்படும்.
சுய கட்டுப்பாடு
என்ன தான் புதிய புதிய திட்டங் களை அமல் படுத்தினா லும் பொது மக்களாகிய
நமக்கு அதைக் குறித்த விழிப்புணர்வு மற்றும் கடமையை அறிந்தி ருத்தல் அவசியம்.
தற்போதுள்ள ரயில்களில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பது நமக்கே தெரியும்.
பொதுச் சொத்துக் களை நாசம் செய்பவர் களைத் தவறாமல் தண்டிக்க வேண்டும்.
பல்லாயிரம் கோடி செலவில் அரசால் கொண்டு வரப்படும் திட்டத்தைச் சரியாக பயன் படுத்துவதும் நமது கடமையே ஆகும்.
Thanks for Your Comments