கடந்த செவ்வாய்க் கிழமை அன்று பெங்களூரு வில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது.
அப்போது விமானத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ராஜூ கங்கப்பா என்ற இளைஞர் பயணித்துள்ளார்.
அவரது இருக்கையில் அமர்ந்திருந்த ராஜூ கங்கப்பா, விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது,
இளம் வயது விமானப் பணிப்பெண் ஒருவர் ராஜூ கங்கப்பாவை கடந்து சென்றுள்ளார்.
அப்போது திடீரென்று பணிப்பெண்ணின் பின் பக்கத்தை பிடித்து தவறான எண்ணத்தில் பிடித்து அலுத்தி யுள்ளார்.
இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த அந்த பணிப்பெண், அவரைக் கண்டித்தார். ஆனால், ராஜூ அவரை ஆபாசமாகத் திட்டி யுள்ளார்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது இவ்வாறு நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் அந்த விமானப் பணிப்பெண் இதுபற்றி தனது சக ஊழியர்களிடம் தெரிவித்தார்.
விமானம் மும்பையில் தரை யிறங்கியதும் விமான நிலையை போலீசாரிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதை யடுத்து ராஜூ கங்கப்பாவை கைது செய்தனர்.
Thanks for Your Comments